உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2010/12/28

24ஐ திருமணம் செய்யும் 84 வயது ‘ப்ளேபாய்’


லாஸ் ஏஞ்சலஸ்: அமெரிக்காவில் வெளியாகும் கிளுகிளு பத்திரிகை ப்ளேபாய். அதன் உரிமையாளர் ஹக் ஹெப்னர். வயது 84. அவரது லேட்டஸ்ட் காதலி கிறிஸ்டல் ஹாரிஸ். வயது 24. தன்னைவிட 60 வயது குறைந்த பெண்ணை விரைவில் திருமணம்
செய்து கொள்ளப் போவதாக டுவிட்டரில் ஹெப்னர் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்கள் முன்புதான் ஹெப்னர் தனது 2வது மனைவி கிம்பர்லி கன்ராட் என்பவரை விவாகரத்து செய்தார்.


மாடலான முதல் மனைவியையும் இவர் ஏற்கனவே விவாகரத்து செய்துவிட்டார். கிறிஸ்டலும் அவரும் கடந்த கிறிஸ்துமஸ் நாளில் மோதிரம் பரிசளித்து திருமணத்தை நிச்சயம் செய்தனர். இதுபற்றி டுவிட்டரில் ஹெப்னர், ‘கிறிஸ்துமஸ் நாளில் இருவரும் சினிமா பார்த்து ரசித்தோம். பிறகு, பரிசுகளை பரிமாறிக் கொண்டோம். கிறிஸ்டலுக்கு நான் மோதிரம் கொடுத்தேன். இருவருக்கும் இது மறக்க முடியாத கிறிஸ்துமஸ் கொண்டாட்டம். நான் மோதிரம் அணிவித்தபோது கிறிஸ்டல் ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்’ என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.