உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2010/12/28

மும்பை தாக்குதல் சம்பவத்தில் ப்ரியாமணி

 மும்பை தாக்குதல் சம்பவத்தைப் பற்றிய படத்தில் ப்ரியாமணி கதாநாயகியாக நடிக்கிறார். மும்பையில் 2008-ம் ஆண்டு, நவம்பர் 26-ம் தேதி தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் பலர் உயிரிழந்தனர். இதில் தீவிரவாதிகளில்
அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டார். இந்த சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு கன்னடத்தில், 'லட்சுமி' என்ற பெயரில் படம் தயாராகிறது. இதில் சிவராஜ்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். 
 
கதாநாயகியாக ப்ரியாமணி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு பெரும்பகுதி வெளிநாடுகளில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் சம்பந்தப்பட்ட முக்கியமான கிளிப்பிங்க்ஸ், தகவல்களை பட இயக்குநர் ராகவ் லோகி சேகரித்திருக்கிறார். அதன் அடிப்படையில் காட்சிகள் அமைக்கப்படுகின்றன. ஏற்கனவே 'ஜோகயா' என்ற படத்தில் சிவராஜ்குமார் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு முடிந்த கையோடு 'லட்சுமி' படப்பிடிப்பில் பங்கேற்கிறார். ப்ரியாமணியுடன் நடிக்கும் பாடல் காட்சியுடன் வெளிநாட்டில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.