உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2010/12/27

யாழ்ப்பாணம் உரும்பிராய்ப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு ஒருவர் பலி


யாழ்ப்பாணம் உரும்பிராய்ப் பகுதியில் இடம் பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். உரும்பிராய் மூன்று கொவிலடிக்கு அண்மையாக நேற்று இரவு 10.30 மணியளவில் வீட்டுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த ஆயததாரிகள் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்க்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளார்கள்.


இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் 52 வயதுடைய மாணிக்கம் சிவலிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டிற்க்குள் நுழைந்த ஆயததாரிகள் பிள்ளையின் காது தோட்டை கழற்றும்படி கூறிவிட்டு குறிப்பிட்ட துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்க்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்கள் சம்பவத்தை அறிந்து உடன் குறிப்பிட்ட இடத்திற்க்குச் சென்ற கோப்பாய் பொலிஸாரும் இராணுவத்தினரும் அந்த இடத்தில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போதிலும் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

நள்ளிரவு 12.00 மணியளவில் இறந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பொலிஸாரினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.