உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2010/12/28

மூடுபனியால் முடங்கிப்போனது புதுடில்லி!- ரயில், விமான சேவைகள் முற்றாக ஸ்தம்பிதம்!


தலைநகர் புதுடில்லி உட்பட வட இந்தியாவின் பல பகுதிகளில் தொடரும் மிக மோசமான மூடுபனி காலநிலையால், விமான ரயில்
போக்குவரத்துக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
இன்று காலை மாத்திரம் இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையத்திற்கு வரவிருந்த, மற்றும் அங்கிருந்து புறப்படவிருந்த 70 விமானங்கள் இடைநிறுத்தப்பட்டு தாமதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு உள்ளூர் நேரம் இரவு 8 மணி தொடக்கம் மோசமான காலநிலை நிலவுவதுடன், மூடுபனியால் விமானநிலையம் முற்றாக மூடியுள்ளது. இதனால் அங்குவரவிருந்த 23 சர்வதேச விமானங்கள், வேறுவிமானநிலையங்களுக்கு திருப்பப்பட்டுள்ளன.

சுமார் 50 தொடக்கம் 175 மீற்றர் வரையான விமான ஓடுபாதை தெளிவாக தெரியாமையினால் விமானங்களை தரையிறக்க முடியாமல் போனதாக விமானநிலையம் அறிவித்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் 100 விமானங்கள் மூடுபனி காலநிலையால் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும், 14 சர்வதேச விமானங்கள் உட்பட 70 விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பவிடப்பட்டிருப்பதாகவும் 38 விமானங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

விமானபயணிகளின் அவசர தேவை கருதி அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்க தனிக்குழு அமைத்துள்ளது அரசு.
இதேவேளை விமானங்கள் தாமதமாவதால், விமானநிலையத்தில் மணிக்கணக்கில் பயணிகள் காத்துக்கிடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை மோசமான காலநிலையால் ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போபால் ஷதாப்தி, அம்ரிஸ்டார் ஷதாப்தி, சீமான்ஷல் எஹ்க்ஸ்பிரஸ் மற்றும் தாஜ் எக்ஸ்பிரஸ் உட்பட பல நெடுந்தூர பயணம் செய்யும் விரைவு ரயில்கள் ஸ்தம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும், 55 உள்ளோர் ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

The Dehradun Bandra Express மற்றும் Mumbai Janata Express ஆகியவற்றின் சேவைகள் அடுத்துவரும் 7 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.