உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2010/12/28

தோல்வி ஏன்..? ஆராயும் ஸ்ரேயா!!


ரஜினியுடன் நடித்த சிவாஜி என்ற ஒரே வெற்றிப் படம்தான் இதுவரை ஸ்ரேயாவை தமிழ் திரையுலகில் அடையாளம் காட்டி வருகிறது.

சொல்லிக் கொள்கிற மாதிரி வேறு எந்தப் படமும் அமையவில்லை. இந்த ஆண்டு வெளியான குட்டி, சிக்குபுக்கு போன்ற படங்களும் கூட ஓடவில்லை.


இது அவரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் விளைவு, ஏன் இந்தத் தோல்வி என்ற சுய பரிசோதனையில் அவரை இறங்க வைத்துள்ளது. இதுகுறித்து ஸ்ரேயா கூறுகையில், "தமிழ், தெலுங்கில் நான் நடித்த சில படங்கள் நன்றாக ஓடவில்லை.

ஒருவிதத்தில் நானும்கூட இதற்குக் காரணம். நல்ல கதைகளைத் தேர்வு செய்து நான் நடிக்காததே இதற்கு காரணம். படங்கள் வெற்றி பெற நல்ல கதைகள் அமையவேண்டும், அப்படி கதைகள் எனக்கு வராமல் போய்விட்டது.

நானும் இதில் பிடிவாதம் காட்டவில்லை. தமிழ் படங்களில் நடிப்பது பெரிய சவாலாக உள்ளது. ஆங்கில ப்படத்தில் நடித்து இருக்கிறேன். சல்மான் ருஷ்டி நாவலை மையமாக வைத்து தயாராகும் இன்னொரு ஆங்கில படத்திலும் நடித்து வருகிறேன்.

ஜீவாவுடன் ரவுத்திரம் படத்திலும் நடிக்கிறேன். இவை எனக்கு பெயர் சொல்லும் அளவுக்கு அமையும் என நம்புகிறேன்..", என்றார்.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.