உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2010/12/29

நடிகை ரம்பா வீடு மீது தாக்குதல்


சென்னையில் உள்ள நடிகை ரம்பா வீட்டில் குடிபோதையில் சிலர் நுழைந்து ரகளையில் ஈடுபட்டனர். வீட்டு காவலாளியும் தாக்கப்பட்டார். மது அருந்தினார்கள் பிரபல நடிகை ரம்பா திருமணமாகி தற்போது தனது கணவருடன் கனடா நாட்டில் வசிக்கிறார்
. அவர் கர்ப்பமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள நடிகை ரம்பாவின் வீட்டில் தற்போது அவரது அண்ணன் குடும்பத்தோடு வசித்து வருகிறார். நேற்று முன்தினம் ரம்பாவின் அண்ணன் குடும்பத்தோடு வெளியே போய்விட்டார். வீட்டில் காவலாளி பாண்டியன் மட்டும் இருந்தார். நள்ளிரவில் அருகில் உள்ள செக்ïரிட்டி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் மது பாட்டிலோடு வந்தனர்.

ரம்பா வீட்டு முன்பு உட்கார்ந்து மது அருந்தினார்கள். வீட்டு முன்பு உட்கார்ந்து மது அருந்த காவலாளி பாண்டியன் எதிர்ப்பு தெரிவித்தார். உடனே, மது அருந்தியவர்கள், காவலாளி பாண்டியனோடு மோதலில் ஈடுபட்டனர். அவர் அடித்து உதைக்கப்பட்டார். இதில் உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது.

வீட்டுக்குள் தாக்குதல் பின்னர் அந்த போதை கும்பல் வீட்டு வளாகத்துக்குள் சென்று அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினார்கள். விளக்குகளும் நொறுக்கப்பட்டன. சுமார் 1/2 மணி நேரம் வீட்டு வளாகத்தை சூறையாடிவிட்டு அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக காவலாளி பாண்டியன் விருகம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.