உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2010/12/28

தங்கம் சேகரிக்கும் பாசிகள்!


பல்வேறு கரைசல்களில் இருந்து தங்கத்தைப் பிரித்தெடுப்பதற்கான ஒரு புதிய முறையை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக் கிறார்கள். சிலவகை பாசிகள், நீர்க்கரைசல் களில் இருந்து தங்க அணுக்களை உட் கவருகின்றன என்று அவர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர்
. அந்த ஆராய்ச்சி இன்னும் ஆரம்பகட்டத்தில்தான் இருக்கிறது. இருந்தாலும் இயற்கை நீர், தொழிற்சாலைக் கழிவுநீர், கைவிடப்பட்ட சுரங்கக் குப்பைகள் ஆகியவற்றில் இருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்க பாசிகளைப் பயன்படுத்தலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

அந்த ஆய்வாளர்கள் நிமெக்சிகோ மாநிலப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள். முன்னொரு காலத்தில் அந்த மாநிலத்தில் பெருமளவு தங்கம் இருப்பதாகத் தெரியவந்தபோது தங்க வேட்டைக்காக மக்கள் மந்தை மந்தையாகப் படையெடுத்தனர். அவர்களால் தங்கம் எடுக்கப்பட்டு, பின் கைவிடப்பட்ட பல சுரங்கங்கள் இன்று அப் பகுதியில் உள்ளன. அங்கு தண்ணீரில் கரைந்திருக்கும் தங்கத்தை பாசியைப் பயன்படுத்திப் பிரித்தெடுப்பது லாபகரமானதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.