உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2010/12/28

மாளவிகா - என்னைத் தொடு


குழந்தைப் பேறுக்குப் பின்னர் நடிக்க வராமல் இருந்து வரும் நடிகை மாளவிகா மீண்டும் ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்கிறார். ஒரு காலத்தில் கவர்ச்சியிலும், நடிப்பிலும் கலக்கியவர் மாளவிகா.
அவர் பாடி நடித்த கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு பாடல் இன்றளவும் ரசிகர்கள் மனதிலிருந்து விலகாமல் உள்ளது.
அதன் பின்னர் அவருக்கு பெரிய ஏற்றத்தைக் கொடுத்தது வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் பாட்டுக்கு அவர் போட்ட அசத்தல் ஆட்டம். கதாநாயகியாக நடித்ததை விட, கவர்ச்சிக் காட்டியதை விட இந்த இரு பாடல்கள்தான் மாளவிகாவின் அசைக்க முடியாத அடையாளங்களாக உள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகிச் சென்றார் மாளவிகா. கையோடு குழந்தையும் பெற்றுக் கொண்டார். அதன் பின்னர் அவர் சினிமாவை நாடவில்லை. இந்த நிலையில் தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார் மாளவிகா.
எம்.ஜி.ஆர். நம்பி இயக்கும் என்னைத் தொடு படத்தில் நடிகை மாளவிகாவாகவே அவர் நடிக்கிறார். இவர் நிலா, சந்திரலேகா ஆகிய படங்களை இயக்கியவர்.இப்படத்தில் தனக்கு கிடைக்கும் வரவேற்பைப் பார்த்து தொடர்ந்து நடிப்பது குறித்து தீர்மானிக்கப் போகிறாராம் மாளவிகா.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.