உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2010/12/28

பிரிட்டனில் இணைய இணைப்பால் ஏழை, பணக்காரர் வேறுபாடு பெருகுகிறதாம் - சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை


பிரித்தானியச் சிறுவர்களுக்கு வீடுகளில் இணைய இணைப்பு இல்லை என்றும் இந்த காரணத்தினால் பாடசாலை சிறுவர்களிடையே ஏழை பணக்காரர் வித்தியாசம் அதிகரித்துள்ளதாக தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன
.

இவர்களில் ஒரு மில்லியன் பேருக்கு வீடுகளில் கணினிகளே இல்லையென்றும் மீதமுள்ள 2 மில்லியன் சிறுவர்கள் கணினி இருந்தும் இணைய இணைப்பு இல்லாமல் இருப்பதாகவும் தொண்டு நிறுவனங்கள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளன.

இணைய இணைப்பு இல்லாமல் இருப்பதால் பல சிறுவர்களால் வீடுகளில் இருந்து கற்பது குறைந்து பாடசாலைகளிலும் அவர்களின் செயல்பாடு குறைந்து காணப்படுவதாக மின்வழிக் கற்றல் அமைப்பு தெரிவித்துள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து சிறுவர்களுக்கும் கணினியும், இணைய இணைப்பும் அளிப்பது உறுதி செய்யப்படாதவரை இந்த வேறுபாடுகள் அதிகரித்து பிரித்தானியர்களின் செயல்திறன் குறைவாகவே இருக்கும் எனவும் அந்த அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.