உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/01/24

சோனியா தான் என்னை 2 ஆவது திருமணம் செய்யுமாறு கூறினார்! செல்வராகவன் பதில்நான் 2வது திருமணம் செய்வதில் சோனியா அகர்வாலுக்கு வருத்தம் என்று கிசுகிசுக்‌கிறார்கள். உண்மையிலேயே என்னை 2வது திருமணம் செய்யச் சொன்னதே சோனியாதான், என்று டைரக்டர் செல்வராகவன் கூறியுள்ளார்.
‌ 

காதல் கொண்டேன் படத்தில் தனுஷ் ‌ஜோடியாக நடித்த சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் அப்படத்தின் டைரக்டரும், தனுஷின் அண்ணனுமான செல்வராகவன். 

திருமணத்துக்கு பிறகு சில காலம் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்த செல்வா - சோனியா தம்பதியினர் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். 

அதைத் தொடர்ந்து இருவரும் பரஸ்பர விவாகரத்தும் பெற்றுக் கொண்டனர். விவாகரத்துக்குப் பின்னர் சோனியா அகர்வால் மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கி விட்டார். சக நடிகைகள் வைக்கும் பார்ட்டிகளிலும் பங்‌கேற்று உற்சாகமாக பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறார். 

இந்நிலையில் டைரக்டர் செல்வராகவன், தற்போது இயக்கி வரும் இரண்டாம் உலகம் என்ற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றும் கீதாஞ்சலி என்பவரை 2வது திருமணம் செய்யப் போவதாக அறிவித்தார். இந்த தகவல் சோனியாவின் காதுகளை எட்டியபோது, ரொம்பவே வருத்தப்பட்டதாக செய்திகள் வெளியாயின. 

அந்த செய்தியை செல்வராகவன் மறுத்துள்ளார். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், "கடந்த ஒரு வருடமாகவே சோனியா அகர்வால் என்னிடம் இன்னொரு திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்தார். தனியாக இருக்காதீங்க திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று அடிக்கடி அறிவுறுத்தினார். 

அந்த அளவு நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இப்போதும் உள்ளோம். கீதாஞ்சலியை நான் திருமணம் செய்வதை அறிந்து சோனியாதான் மிகவும் சந்தோஷப்பட்டார். நானும் சோனியா அகர்வாலும் விவகாரத்துக்கு முன்பு இரண்டு வருடமாக பிரிந்துதான் இருந்தோம். 

விருப்பப்பட்டுதான் இந்த பிரிவு முடிவை எடுத்தோம். இது பலருக்கும் தெரியாது. அதனால்தான் இவ்வளவு சீக்கிரம் இரண்டாவது திருமணமா? என்று கேட்கிறார்கள். விவாகரத்து ஆனவர்கள் மீண்டும் திருமணம் செய்து கொள்வதில் தவறு இல்லை. 

கீதாஞ்சலி நல்ல பொண்ணு. என்னைப்போல அவருக்கும் சினிமா மேல் காதல் இருக்கிறது. எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது, என்று கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.