உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/01/21

உலகின் அதிக வெப்பம் மிகுந்த ஆண்டாக '2010' அறிவிப்பு!


ஐ.நாவின் வானிலை அவதான மையத்தால், உலகின் அதிக வெப்பம் மிகுந்த ஆண்டாக கடந்த '2010' அறிவிக்கப்பட்டுள்ளது. (World Meterological Organisation) உலக வானிலை மையத்தின் செயலாளர் மிச்சேல் ஜரௌட் இது தொடர்பி விடுத்த அறிக்கையில்

ஆசியா, ஆபிரிக்கா, போன்ற வெப்ப வலய நாடுகள் முதல், ஆர்ட்டிக், கிறீன்லாந்து கனடாவின் துருவப்பகுதிகள் வரை பூமியின் அனைத்து பாகங்களிலும் 2010 அதிக வெப்பம் மிகுந்த ஆண்டாக உணரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

1961-90 வரையான காலப்பகுதியில் இருந்த உலக சராசரி வெப்பநிலையை விட கடந்த 2010 இல் 0.53 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது.

இதற்கு முன்னர் 1998 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளே உலகின் அதிக வெப்பம் மிகுந்த ஆண்டுகளாக கணிக்கப்பட்டிருந்தன. 19ம் நூற்றாண்டிலிருந்து, உலக காலநிலை மாற்றம் உத்தியோகபூர்வமாக பதியப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் தற்போது 2010 அதிக வெப்பநிலை கொண்ட ஆண்டாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வெப்பநிலை அதிகரிப்பினால் ஆர்ட்டிக் வலையத்தில் உருகும் பனிப்பாறைகள் மாதந்தோறும், 1.35 சதுர கிலோ மீற்றர் பரப்பளவிற்கு முழுவதுமாக கரைந்து பரவி விடுகிறது.

கடந்த வருட கோடை காலத்தில் ரஷ்ய காடுகள் தீப்பற்றி எரிந்தமை, பாகிஸ்த்தானை உலுக்கிய வெள்ளப்பெருக்கு, சமீபத்திய அஸ்திரேலியா பிரேசில் மற்றும் சிறிலங்காவில் வெள்ளப்பெருக்கு என்பவற்றிற்கு 2010 இன் உயர்வடைந்த காலநிலையின் செல்வாக்கே முக்கிய காரணம் என
அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.