உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/01/25

பற்களை பாதுகாக்கும் உணவு முறைகள்


பல் சொத்தை, பயோரியா (பற்புறத் திசு நோயினால் பற்களில் அசைவு ஏற்படும்.) போன்ற நோய்கள் வராமல் தடுக்க வாயைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்
.

காலையிலும் இரவு படுக்கப் போகும் முன்பும் நவீன நார்த் துலக்கிகள் (BRUSH) கொண்டு பல் துலக்க வேண்டும்.
பற்பசை - புளோரைடு கலந்த பற்பசை உபயோகிப்பது நல்லது. குறிப்பாக குழந்தைகளுக்கு புளோரைடு கலந்த பற்பசை சிறப்பானது.

பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியம். தாய்ப்பாலில் குழந்தைக்குத் தேவையான ஊட்டச் சத்து அடங்கியுள்ளது. குழந்தையின் முகம் - தாடை வளர்ச்சிக்கு ஏதுவாக வளரும் பற்களுக்கு நோய் வராமல் தடுக்கும் சக்தியைத் தாய்ப்பால் கொடுக்கிறது.

பற்களில் ஒட்டிக் கொள்ளக் கூடிய வெண் சர்க்கரை கொண்ட மிட்டாய் - சாக்லெட் - ஐஸ்கிரீம் போன்றவற்றைக் குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது. இது குழந்தைகளின் பற்களைத் துரிதமாக அரித்து விடும்.

காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள், தானியங்கள், பருப்பு வகைகளைக் கொடுத்து வந்தால் வளரக் கூடிய குழந்தைகளுக்குப் பற்களின் வளர்ச்சி முழுமையாகவும் நிறைவாகவும் இருக்கும்.

சாப்பிட்ட பின்பு வாய் நிறைய நல்ல தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படியே அந்தத் தண்ணீரால் வாயைக் கொப்பளித்து விழுங்க வேண்டும் (Swish and Swallow). துப்பக் கூடாது. இதனால் வாய் சுத்தமாகும்.
ஒவ்வொரு முறை சாப்பாட்டுக்குப் பின்பும் ஒரு தேங்காய்த் துண்டையோ அல்லது ஒரு கேரட்டையோ நன்றாக மென்று சாப்பிட வேண்டும். இதனால் பற்களின் மேல் ஒட்டிக் கொண்டிருக்கும் உணவுத் துகள்கள் நீங்கி பற்கள் இயற்கையாகவே சுத்தம் அடைந்து விடுகின்றன.

எந்தெந்த காய்கறிகளை அல்லது கீரைகளை சமைக்காமல் சாப்பிட முடியுமோ அவற்றை மென்று சாப்பிடுங்கள். அவை பற்களுக்குப் பயிற்சி அளிப்பது மட்டும் அல்லாமல் உடலுக்கும் ஊட்டச் சத்து அளிக்கிறது.
வாயின் இருபுறமும் சமமாக மென்றுச் சாப்பிடுவது நன்று.

புகையிலை, பான் பராக், குட்கா போன்ற பழக்கம் வேண்டாம். இப்பழக்கத்தால் வாய்ப் புற்று நோய் வரும்.
அதிக சூடான உணவுகள் - பானங்களையோ அல்லது அதிக குளிர்ச்சியானவற்றையோ தவிர்ப்பது நல்லது.
ஆறு மாதத்துக்கு ஒரு முறை பல் மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொண்டால் பற்கள் கெடுவதில்லை. 
உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.