உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/01/21

சினிமாவுக்கு முழுக்கு போட்டார் கேப்டன்


நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான விஜயகாந்த் ‌சினிமாவுக்கு முழுக்கு போட்டுள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடை‌பெறவிருப்பதைத் தொடர்ந்து அரசியலில் முழு கவனம் செலுத்துவதற்காக சினிமாவுக்கு முழுக்கு போட்டிருக்கிறார். 


சினிமாவையும், அரசியலையும் தமது இரண்டு கண்ணாக பார்த்தவர் எம்.ஜி.ஆர். அவரைபோலவே வரவேண்டும் என்ற நோக்கத்தில் அரசியல் களம் புகுந்துள்ள விஜயகாந்த், நடிப்பு, அரசியல் என்றில்லாமல் சமீபத்தில் வெளியான விருதகிரி படம் மூலம் இயக்குநர் அவதாரமும் எடுத்தார். ஆனால் விருதகிரி படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. 

இந்நிலையில் தமது அடுத்தபடத்தையும் இவரே இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாயின. இதற்கான அறிவிப்பு வெளிவர இருந்தநிலையில் அதனை தள்ளிப்போட்டுள்ளார் கேப்டன். இதுகுறித்து விசாரித்தபோது, தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தற்காலிகமாக தமது அடுத்தபட படத்திற்கான வேலையை தள்ளிபோட்டதாக தெரிகிறது.

தற்போது அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ள விஜயகாந்த், எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் சேலத்தில் நடந்த மாநாட்டில் தி.மு.க., அரசை தாக்கி பேசினார். மேலும் முதல்வர் கருணாநிதி போட்டியிடும் தொகுதியில், அவரை எதிர்த்து போட்டியிடப் போவதாகவும் அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.