உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/01/27

சூர்யா கொடுக்கும் இம்சை ?விஜய் நடிக்க மறுத்த அல்லது நடிக்க முடியாமல் போன படங்களை பெரிய பட்டியலே போடலாம். அப்படி வந்தப் படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட். அந்த லிஸ்டில் இப்போது 3 இடியட்ஸ் படமும் சேர்ந்துள்ளது.

விஜய் நடிக்க இருந்த 3 இடியட்ஸ் ரீமேக்கில் சூர்யா முடிவாகி இருக்கிறார். ஏப்ரல் மாதம் வரை \'ஏழாம் அறிவு\' ஷூட்டிங், அதை முடித்த பிறகு மீண்டும் கே.வி.ஆனந்தோடு \'மாற்றான்\' என சூர்யாவுக்கு அடுத்தடுத்து படங்கள் காத்துக் கொண்டிருக்கிறது. இதில் சில பல காரணங்களால் 3 இடியட்ஸ் படத்தில் இருந்து விஜய் வெளியேற்றப் பட்டார் அல்லது விலகிக் கொண்டார். அந்த வாய்ப்பு சூர்யாவுக்கு சென்றது. பல மீட்டர் மேட்டர்களுக்குப் பிறகு சூர்யாவை சம்மதிக்க வைத்துள்ளார் ஷங்கர். 

தமிழில் விஜய் நடிக்க இருந்ததால் தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது கஜினி, ரத்தச்சரித்திரம் படங்களுக்கு பிறகு சூர்யாவுக்கும் தெலுங்கில் நல்ல மார்கெட் இருப்பதால் தெலுங்கிலும் அவர் தான் நடிக்கிறார். சூர்யா தமிழில் நடித்த கஜினி படத்தின் இந்தி ரீமேக்கில் அமீர் கான் நடித்தார். இப்போது அமீர் கான் இந்தியில் நடித்த 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக்கில் சூர்யா நடிக்கிறார். அதனால் படத்தின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்து உள்ளது. 

சூர்யாவுடன் ஜீவா, ஸ்ரீகாந்த் நடிக்கிறார்கள். அந்நியன் படத்தைத் தொடர்ந்து ஹாரிஸ் ஜெயராஜ் ஷங்கரோடு இசையாய் இணைகிறார். ஜீவா, ஸ்ரீகாந்த் நடிக்கும் காட்சிகளை ஊட்டியில் படமாக்கிக் கொண்டிருக்கிறார் ஷங்கர். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஜெமினி பிலிம் சர்க்யூட் படத்தை தயாரிக்கிறது. 

படத்தின் டைட்டிலை இன்னும் முடிவு செய்யாமல் இருக்கிறார்கள். படத்தின் முக்கியக் காட்சிகளை காஷ்மீரில் உள்ள கல்லூரி ஒன்றில் படமாக்க திட்டம். சூர்யா கிடைக்கிற வரைக்கும் அவர் இல்லாத காட்சிகளை முடித்து விடலாம் என முடிவு செய்துள்ளார் ஷங்கர். 


0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.