உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/01/21

ஜலதோஷமா?


கெடுதல் செய்யாதது. அதே நேரத்தில் எல்லோருக்கும் எளிதாகப் பரவும் தொற்று நோய்க் கிருமி ஜலதோஷக கிருமிகள்தான்.
அமெரிக்காவில் வேறு எந்த வியாதியையும் விட ஜலதோஷத்தினால் அவதிப்படுபவர்களே மிக அதிகம்.

குளிர்காலத்திலும், மூக்கு ஒழுகும் நேரத்திலும் குளிர்ந்த தண்ணீரில் தினமும் குளித்து சுத்தமாக இருந்தாலே போதும். ஜலதோஷம் பாதி குணமாகும். அடிக்கடி கைகளைக் கழுவிக் கொள்வது நல்லது.
பேருந்தில் நின்று கொண்டே பயணிப்பவர்கள் கைகளை உடனே கழுவ வேண்டும். இன்னொருவர் பிடித்திருந்த இடத்தில் நாம் கை வைத்துப் பிடித்துக்கொண்டு நிற்போம். அவர் கையிலிருந்த கிருமிகள் நம் கைக்குப் பரவுகின்றன.
சுற்றுப்புறச் சூழ்நிலை, தூக்கமின்மை, உடல் ‘சில்’ என்று இருப்பது, சோம்பல், திடீரென்று புழுதியும் குளிர்ந்த காற்றும் வீசுவது , அலர்ஜி முதலியவைகளால் ஜலதோஷ நோய்க் கிருமிகள் எளிதில் நம் மூக்கு வழியே சென்று விடுகின்றன.
ஜலதோஷம் ஒருவருக்கு அதிகப் பட்சம் ஏழு நாள்கள் வரை கூடத் தொடர்ந்து இருக்கும்.
ஜலதோஷம் ஏற்பட்டதும் வைட்டமின் சி (200 மில்லி கிராம்) மாத்திரை ஒன்றை வாயில் போட்டுக் கொள்ளவும். அடுத்து தண்ணீர் சேர்ந்த எலுமிச்சம்பழச்சாறு அருந்தவும்.
உடலில் உள்ள நச்சுப் பொருள்களை வெளியேற்றுவதன் மூலம் ஜலதோஷத்தை முற்றிலும் குணமாக்கலாம்.
பழச்சாறு, இரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மையை அமிலத்தன்மையை சமன் செய்கிறது. வெந்நீர், சிறுநீரகங்களைச் சுத்தம் செய்கிறது.
இளநீர் சாப்பிடுவதும் நல்லது. இதில் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் உள்ளன.
நிமிடத்துக்கு நிமிடம் மூக்கைச் சிந்திக் கொண்டே இருப்பவர்கள் மூன்று நாட்கள் பழச்சாற்றை மட்டுமே உணவாகச் சாப்பிட்டு வந்தால் வியத்தகு முறையில் ஜலதோஷத்திலிருந்து விடுபடுவார்கள்.
அன்னாசிப் பழச்சாறு இரண்டு வேளையும் மற்ற இரு வேளை வாழைப்பழம் தவிர வேறு பழங்களையும் சாறாக அருந்த வேண்டும்.
மூன்று நாட்களுக்குப் பிறகுப் பழங்கள் காய்கறி சாலட் பழச்சாறு, கடலை தானியம் என்று நான்கு நாள்கள் இந்த முறையில் சாப்பிட வேண்டும்.
இந்த ஏழு நாள்களிலும் மாவுப் பொருட்கள், முட்டை, இறைச்சி போன்றவை கூடாது.
மாற்று முறை :
ஒரு நாள், இரண்டு நாள் வந்துவிட்டுப் போகும் ஜலதோஷத்தையும் முற்றிலும் குணப்படுத்தலாம்.

ஜலதோஷம் ஏற்பட்டதும் 200 கிராம் வெள்ளை முள்ளங்கியை ஜூஸாக மாற்றி உடனே அருந்த வேண்டும். தொடர்ந்து தும்மல், மூக்கு ஒழுகிக் கொண்டே இருப்பதை இது கட்டுப்படுத்தும். அத்துடன் ஜலதோஷத்தன்று தயிர்சாதம், மோர், தயிர், பால் போன்றவற்றை நன்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். இரவில் மஞ்சள் பவுடர், மிளகுத்தூள் சேர்த்த பால் அருந்தினால் இரவு மூக்கு அடைப்பு, மூக்கு ஒழுகுதல் இன்றி நிம்மதியாகத் தூங்கலாம்.
ஜலதோஷத்தைக் கட்டுப்படுத்துவதில் - வராமல் தடுப்பதில் - வைட்டமின் “சி” முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, தினமும் ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்றவை சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஜலதோஷம் விரைந்து குணமாக அன்றைய தினம் தவறாமல் குளிர்ந்த தண்ணீரில் குளிக்க வேண்டும். சுடு தண்ணீரால் ஜலதோஷம் குணமாகாது. குளிக்காமல் இருந்தால் ஜலதோஷம் அதிகமாகும்.
பிரபல பத்திரிகையாளரான குஷ்வந்த்சிங் ஜலதோஷத்தினால் அவதிப்படுகிறவர். இதைத் தடுக்க அவர் தவறாமல் தினமும் குளிர்ந்த தண்ணீரில் குளிக்கிறார்! நீங்களும் குளிர்ந்த தண்ணீரிலேயே குளியுங்கள். ஜலதோஷம் கட்டுப்படும். மேலும் - சாத்துக்குடி ஜூஸில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து அருந்தினால் கடுமையான ஜலதோஷம் குணமாகும். வெள்ளைப்பூண்டு சூப், சுக்கு டீ முதலியவையும் உடனே ஜலதோஷத்தைக் குணமாக்கும்.
வீட்டில் சூரியகாந்திச் செடி வளர்ந்தால் அது ஜலதோஷக் கிருமிகள் நம்மை அண்ட விடாமல் தடுக்கும்.
இரவில் தூங்க முடியாத அளவுக்கு ஜலதோஷமா? இரண்டு எலுமிச்சம்பழங்களைப் பிழியுங்கள். அதில் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து சூடுபடுத்துங்கள். அதில் சிறிது தேன் சேர்த்து அருந்துங்கள். பிறகு படுக்கச் செல்லுங்கள். மிகச்சிறந்த சக்தி வாய்ந்த ஜலதோஷ மருந்து இது.
மூக்கு அடைப்பு அகல மஞ்சளை எரித்து, அதன் புகையை நுகர்ந்தால் போதும்.
ஜலதோஷம் குணமாகவும், ஜலதோஷம் வராமல் தடுக்கவும் அடிக்கடி ஆப்பிள், ஆரஞ்சு, இளநீர், சாத்துக்குடி, மாம்பழம், பால், தயிர், பாகற்காய், பசலைக் கீரை, வெங்காயம், வெள்ளைப்பூண்டு, காரட், முள்ளங்கி ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளுங்கள். குளிர்காலத்தில் இவைகளில் மூன்று அல்லது நான்காவது தினசரி உணவில் இடம் பெறுமாறு பார்த்துக் கொள்ளவும்.
எலுமிச்சை ஜூஸும், சுக்குக் காபியும், மோரும் உங்களின் பிரியமான பானமாக இருக்கட்டும்.
இந்த உணவு முறைகளினால் ஆண்டிற்கு ஒரு முறை கூட உங்களுக்கு ஜலதோஷம் வரவே வராது.


படிச்சிட்டு சும்மா போறிங்களே!
ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை போடுங்கள் 
நன்றி  

1 கருத்து:

  1. நன்றி நண்பரே , ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் . இந்தப் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் . பகிர்வுக்கு நன்றி ...

    நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....உங்களுக்காக வெயிட்டிங்....

    http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_21.html

    பதிலளிநீக்கு

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.