உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/01/31

ஒரு சந்திப்பில்

""வாழ்க்கையில் சந்தேகம் வரலாம். ஆனால் அந்த சந்தேகம் வந்த வேகத்திலேயே  திரும்பிப் போயிடணும். இல்லேன்னா அது வீட்டில் நிரந்தரமாகத் தங்கி, குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்திவிடும் என்று பெரியவங்க சொல்வாங்க.


அது மாதிரி அன்பான மனைவி, அழகான மகள் என சந்தோஷமாக வாழ்க்கை நடத்தும் ஒருவரின் மனதில் தேவையில்லாத ஒரு சந்தேகப் புயல் வீசத் தொடங்குகிறது.

குதூகலமாக இருந்த அந்த குடும்பம், எப்படிப்பட்ட ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது என்பதை மிக யதார்த்தமாகவும், பரபரப்பாகவும் சொல்லும் படம்தான் "ஒரு சந்திப்பில்'.

இந்தப் படத்தில் கணவர் பாத்திரத்தில் "அழகி' படத்தில் வில்லனாக நடித்த எம்.எஸ்.அருள்மணி நடிக்க, அவருக்கு மனைவியாக சிந்து நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் சிங்கமுத்து நடிக்க, புதுமுகம் பவீனா, ஷீலா இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி தொடர்ந்து ஏலகிரி, ஜலகம்பாறை நீர் வீழ்ச்சி, பெங்களூர் போன்ற இடங்களில் நடந்து முடிந்திருக்கிறது.  

மகிபாலன் ஒளிப்பதிவு செய்ய, எம்.கணேஷ் எடிட்டிங் செய்கிறார். அருள்ராஜ் இசையமைக்க, ரமேஷ் ரெட்டி நடனம் அமைத்துள்ளார். பாடல்களை ஞானக்கரவேலுவும், கவிஞர் ஜெயங்கொண்டானும் எழுதியுள்ளார்கள்'' என்று படம் பற்றி சிலாகித்து பேசுகிறார் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியிருக்கும் ஆனைவாரி அ. ஸ்ரீதர். இவர் ஏற்கனவே "வேடப்பன்' எனற படத்தை இயக்கியிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

"ட்ரை ஸ்டார் மூவிஸ்' நிறுவனம் சார்பில் ஜெயராஜ் தயாரித்துள்ள இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது நடந்து வருகிறது. படம் விரைவில் திரைக்கு வருமாம்.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.