உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/01/29

நயன்தாராவுக்கும் எனக்கும் வயசு வித்தியாசம் அதிகமில்லை.நயன்தாராவுக்கும் எனக்கும் வயசு வித்தியாசம் அதிகமில்லை. ஆனாலும் கேரக்டரின் முக்கியத்துவம் கருதியே அவருக்கு அம்மாவாக நடித்தேன்,
என்றார் நடிகை மனீஷா கொய்ராலா. இந்தியில் பரபரப்பான நாயகியாக இருந்தவர் மனீஷா. தமிழில் பம்பாய் படத்தில் அறிமுகமாகி, ஷங்கரின் இந்தியன், ரஜினியின் பாபா உள்ளிட்ட பெரிய படங்களில் நாயகியாக நடித்தார்.

கடந்த ஆண்டு நேபாள தொழிலதிபரை மணந்த அவர், இப்போது தனது அடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்துள்ளார். வழக்கம்போல அம்மா, மாமியார் வேடங்களை ஒப்புக் கொள்ளத் துவங்கியுள்ளார்.

மலையாளத்தில் நயன்தாராவுக்கு அம்மாவாகவும், மாப்பிள்ளையில் தனுஷுக்கு மாமியாராகவும் நடித்துள்ளார்.

இதுகுறித்து மனீஷா கூறுகையில், "நயன்தாராவின் அம்மா வேடத்தில் நடிக்க அழைத்தபோது முதலில் யோசித்தேன். எனக்கும் நயன்தாராவுக்கும் வயது வித்தியாசம் அதிகமில்லை. ஆனாலும் படத்தில் எனக்கு அழுத்தமான வேடம். என்னைச் சுற்றியே கதை வரும். எனவேதான் சம்மதித்தேன்.

எனது 20-வது வயதில் பம்பாய் படத்தில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகவே நடித்திருக்கிறேன். எனவே இது ஒரு பெரிய விஷயமில்லை.

நயன்தாராவைப் பொறுத்தவரை பழக இனிமையானவர். அவருக்கு தாயாக நடித்தது தவறல்ல.

மாப்பிள்ளை படத்தில் தனுஷ் மாமியாராக நடித்ததும் மறக்க முடியாதது...," என்றார்

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.