உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/02/24

2 உலக அழகிகளுடன் நம்ம பிரஷாந்த்


"ஜீன்ஸ்", "கண்ணெதிரே தோன்றினால்" போன்ற படங்களில் நடித்த நம்ம பிரஷாந்த்தை யாரும் மறந்திருக்க முடியாது. சில தனிப்பட்ட பிரச்சனைகளின் காரணமாக, சிறிது கால இடைவெளிக்கு பிறகு மீண்டும் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார் . "பொன்னர் சங்கர்",
"மலையூர் மம்பூட்டியான்", "புலன் விசாரணை" அவரது நடிப்பில் வரவுள்ளது. இதில் "பொன்னர் சங்கர்" என்ற படம் மிக முக்கியமான படமாக தெரிகிறது. கலைஞரின் அதி விசேஷமான படைப்புகளில், வரலாற்று புதினமான "பொன்னர் சங்கர்" படமும் இருக்கப்போகிறது. பிரஷாந்த்தை வைத்து இந்த படத்தினை இயக்கி, தயாரிக்கலாம் என்ற நிலையில் இந்த படத்தை துவக்கினார் தியாகராஜன். இடையில், இந்த தயாரிப்பு பொறுப்புகளை ஏற்பதாக "இளைஞன் " படத்தை தயாரித்த மார்டின் அறிவித்திருந்தார். பின்னர், இவருக்கும் தியாகராஜனுக்கும் பிரச்சனை ஏற்பட்ட காரணத்தினால் படத்தின் படப்பிடிப்பு தள்ளிபோனதாக தெரிகிறது.
சில தடங்கலுக்குப் பிறகு, இப்போது புதுப்பொலிவுடன் இந்த படத்தை மீண்டும் தியாகராஜனே இயக்கி தயாரிக்க போவதாக தெரிகிறது.
இப்போது தயாரிப்புப் பொறுப்பு மீண்டும் தியாகராஜனிடமே வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த படம் வரலாற்று ("பீரியட்") பின்னணியில் எடுப்பதனால்,ஏறக்குறைய படப்பிடிப்பு சம்பந்தமான எல்லா விஷயங்களுக்கும் செட் போட்டு ஷூட்டிங் செய்யவேண்டிய கட்டாயம். படம் தாமதமாக, இதுவும் ஒரு காரணமாக இருக்ககூடும். எப்படியோ படத்தின் பெரும்பாலான படபிடிப்பு முடிந்துவிட்டது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா பிரதேசம், மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.
பல பிரம்மாண்டன்களைக் கொண்டுள்ளது இந்த படம். கதை, திரைக்கதை, வசனங்களை எழுதியுள்ளார் டாக்டர்.கலைஞர். ஒரு ஸ்பெஷலான சண்டைக் காட்சி ஒன்று உள்ளது. அதில் 500௦௦௦ துணை நடிகர்களை பங்கேற்க வைத்துள்ளனர். தமிழில் வந்துள்ள சரித்திர படங்களிலேயே மிக பிரம்மாண்டமான படமாக "பொன்னர் சங்கர்" தான் திகழப் போகிறது என தியாகராஜன் கூறுகிறார். தலையூர் காளியண்ணன் வேடத்தில் நடித்திருக்கிறார் மத்திய அமைச்சரான நெப்போலியன். ராஜ்கிரண், ஜெயராம், வடிவேலு, நாசர், குஷ்பூ, விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். சினேகா பிரஷாந்த்தின் தங்கை பாத்திரத்தில் வருகிறார். இதில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் பிரஷாந்த். பிரஷாந்த்துடன் திவ்யா பரமேஷ்வர், பூஜா சோப்ரா என 2 உலக அழகிகள் ஜோடியாக நடித்துள்ளார்கள். கொஞ்சம் தாமதமானாலும், தாம்-தூம்னு வருகிறாரோ நம்ம பிரஷாந்த்?

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.