உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/02/19

2 ஆவது திருமணம் பற்றி சோனியாஅகர்வால் கருத்து!இயக்குனர் செல்வ ராகவனும் நடிகை சோனியா அகர்வாலும் விவாகரத்து செய்து பிரிந்துள்ளனர். செல்வராகவனுக்கு மீண்டும் திருமணம் நடைபெற உள்ளது. 

தன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பெண்ணையே காதலித்து மணக்கிறார். சோனியா அகர்வால் மீண்டும் சினிமாவுக்கு வந்துள்ளார். 

சிம்பு கதாநாயகனாக நடிக்கும் வானம் படத்தில் தற்போது நடித்து வருகிறார். செல்வராகவனுக்கு 2-ம் திருமணம் நடப்பதால் சோனியா அகர்வாலும் மறுமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வந்துள்ளன. 

இதனை சோனியா அகர்வால் மறுத்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது:- விவாகரத்துக்கு பின் கொஞ்ச நாட்கள் கஷ்டப்பட்டேன். 

என்னை சுற்றி இருந்த நண்பர்களும் உறவினர்களும் கொஞ்சம் கொஞ்சமாக என்னை அதில் இருந்து மீட்டனர். இப்போது புது வாழ்க்கையை ஆரம்பித்து இருக்கிறேன். 

திடீர் என்று திருமணம் ஆனதால் நடிப்பை விட்டேன். தற்போது மீண்டும் சினிமாவில் நுழைந்துள்ளேன். 

செல்வராகவன் இன்னொரு பெண்ணை மணப்பதால் எனக்கும் அது போல் திருமணம் நடக்கும் என பேசுகின்றனர். 

என் வாழ்க்கையில் இன்னொரு கல்யாணத்துக்கு வாய்ப்பே இல்லை. அதற்கான மன நிலையிலும் நான் இல்லை என்றார்.

3 கருத்துகள்:

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.