உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/02/07

விஜய் - விக்ரம் - விஷால் (வி3!) இணைந்து நடிக்கிறார்கள்.

ஹீரோக்கள் நடிக்கும் படங்களின் வரவு மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது தமிழில். அதற்கு சிகரம் வைப்பது போல ஒரு படம் உருவாகிறது மணிரத்னம் இயக்கத்தில்.


ராவணாவுக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் இந்தப் புதிய படத்தில் விஜய் - விக்ரம் - விஷால் (வி3!) இணைந்து நடிக்கிறார்கள்.

இந்தப் படம் பொன்னியின் செல்வன் சரித்திரக் கதையின் தழுவலாக இருக்கும் என்று ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தோம். எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதை வசனம் எழுதுவதாகக் கூறப்பட்டது.

பொதுவாக தனது படங்களின் தலைப்பு முதல் டெக்னீஷியன்கள் விவரம் வரை எதையும் வெளியில் சொல்லாமல் ரகசியம் காப்பது மணிரத்னம் பாணி. இந்தப் படத்திலும் அது தொடர்கிறது!

இந்தப் படத்துக்கு சன் பிக்சர்ஸ் நிதியுதவி வழங்குவதாகக் கூறப்படுகிறது. ரூ 200 கோடிக்கும் அதிகமாக பட்ஜெட் போடப்பட்டுள்ளதாம்.

தமிழில் இப்போது உருவாகிவரும் பெரிய பட்ஜெட் படங்கள் அனைத்துமே இரண்டு அல்லது மூன்று நாயகர்கள் நடிப்பதுதான். பாலாவின் அவன் இவன், அஜீத்தின் மங்காத்தா, விஜய் - ஜீவா - ஸ்ரீகாந்த் நடிக்கும் நண்பன் என பெரிய லிஸ்டே உள்ளது!

விஜய் - விக்ரம் - விஷால் இணைந்து நடிப்பது இதுதான் முதல்முறை.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.