உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/02/05

த்ரிஷாவுக்கு கல்யாணம்


நடிகை த்ரிஷா இந்த ஆண்டு இறுதிக்குள் கல்யாணம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யாவின் குஷி படத்தின் மூலம் சிறிய கேரக்டரில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை த்ரிஷா.
பிற்காலத்தில் நாயகியாக முன்னேறி, பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நாயகிகள் பட்டியலில் இடம்பிடித்த த்ரிஷா, போதையில் குத்தாட்டம், நிர்வாண குளியல் என பல சர்ச்சைகளையும் சந்தித்து விட்டார். தமிழ், தெலுங்கு என பிஸியாக இருந்த த்ரிஷா, சமீபத்தில் இந்தி படம் ஒன்றிலும் நடித்தார். இதுவரை காதல் வலையில் சிக்காமல் இருந்து வந்த த்ரிஷா, இப்போது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளாராம். இந்த‌ ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடைபெறும் என தெரிகிறது.
திருமணத்திற்காக மாப்பிள்ளை வேட்டையில் த்ரிஷாவின் பெற்றோர் இறங்கியிருக்கும் அதே வேளையில் அம்மணி, பிராணிகளுக்கான பாதுகாப்பு இல்லம் ஒன்றை தொடங்க திட்டமிட்டிருக்கிறாராம். பிராணிகள் மேல் அதிக பிரியம் உள்ளவர் நடிக‌ை த்ரிஷா. பெங்களூரில் சாலையில் கிடந்த நாய்க்குட்டியை எடுத்து வந்து தனது வீட்டில் வளர்ந்து வரும் த்ரிஷா, பிராணிகள் நல அமைப்பின் தூதுவராகவும் உள்ளார். ஆதரவில்லாமல் பிராணிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்த அவர் தனது நண்பர்களுடன் இணைந்து பிராணிகள் பாதுகாப்பு இல்லம் தொடங்க முடிவு செய்திருக்கிறார். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், நாட்டில் நிறைய பிராணிகள் உதவியின்றி இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் பாதுகாப்பு அளிப்பது இயலாத காரியம். ஆனாலும் முடிந்த அளவு அவைகளுக்கு உதவ திட்டமிட்டுள்ளேன். நண்பர்களுடன் இணைந்து பிராணிகள் பாதுகாப்பு இல்லம் துவங்க முடிவு செய்துள்ளேன், என்றார் 

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.