உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/02/09

எலும்பு தேய்வு நோய் வராமல் தடுக்கலாம்.

உடலுக்கு வடிவத்தையும் வலுவையும் தருவது எலும்புகள் கொலாஜென் இழைகள் மற்றும் கால்சியம், பாஸ்பேட் ஆகியவற்றின் உப்புகளால் ஆனவை.

 

எலும்புகள் இயல்பில் கடின தன்மையைத்தான் பெற்றுள்ளன. ஆனால் எலும்பு தேய்வு நோயில் எலும்புகள் தேய்ந்து பஞ்சைப் போன்று மென்மையாக மாறுகின்றன. 

இந்த நோயை, மருத்துவ உலகம் ஆஸ்டியோ போரோசிஸ் என்று அழைக்கின்றது. ‘எலும்புத் தேய்வு நோய்’ பிற நோய்களைப் போல அறிகுறிகளை வெளியே காட்டுவதில்லை. 

எனவேதான் இதை உடனடியாக கண்டறிய முடிவதில்லை. எலும்புகளில் உள்ள கால்சியம் சத்து எந்த விதமான அறிகுறிகளையும் காட்டாது குறைந்துவிடுகின்றது. இயல்பில் எலும்புகள் புதிதாக தோன்றும் பண்பைப் பெற்றுள்ளன. 

பழைய எலும்புகள் அகற்றப்பட்டு அதற்குப் பதிலாக புது எலும்புகள் உருவாவது நம்முடைய உடலில் தொடர்ந்து நடைபெறுகின்றது. உடல் இயக்கம் மற்றும் ஹார்மோன்கள் ஆகியவை எலும்புகள் தொடர்ந்து வளர்ந்திட உதவுகின்றன. 

எலும்பு தேய்வு நோயினால் பாதிக்கப்பட்ட பின்னர் ஒரு சில அறிகுறிகள் வெளிப்படத் தொடங்கும். அடி முதுகுவலி, லேசாக தவறி விழுந்தால் கூட எலும்பு முறிவு ஏற்படுதல் ஆகியன இதன் அறிகுறியாக வெளிப்படும். 

எலும்புத் தேய்வை எக்ஸ்ரேக்கள் மற்றும் ஆஸ்டியோ சி.டி. மூலமாக கண்டறியலாம். ‘ஆஸ்டியோ கம்யூட்டரைஸ்டு மெமோகிராபி’ என்பது எலும்பில் உள்ள சுண்ணாம்புச் சத்தின் அளவை கண்டறியும் கருவியாகும். 

எலும்பு தேய்வு நோயை குணமாக்க இயலாது. எனினும் இந்த நோயை வராமல் தடுக்கலாம். எலும்பு தேய்வு நோய் ஏற்பட்டோருக்கு மேலும் பரவாமல் தடுக்க அலோபதி மருத்துவம் உதவுகின்றது. 

எலும்பு தேய்வு நோய் மரபு ரீதியாக வரும் சாத்தியக்கூறுகள் உள்ளன. சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ள பொருட்களை நம்முடைய உணவில் சேர்த்துக் கொண்டால் எலும்பு தேய்வு நோய் வராமல் தடுக்கலாம்

4 கருத்துகள்:

  1. நல்ல தகவல்கள் படித்தேன்..
    நண்பரே... எழுத்துக்களை கொ ஞ்சம் பெரியதாக இருந்தால் படிப்பதற்கு வசதியாக இருக்கும்..
    அப்புறம் சொல் சரிபார்ப்பை எடுத்து விட்டால் கமாண்ட் போடுவதற்கு வசதியாக இருக்கும்

    பதிலளிநீக்கு
  2. தங்கள் வடைக்கும்
    கருத்துக்களுக்கும்
    நன்றிகள்

    பதிலளிநீக்கு

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.