தமிழ்நாட்டின் பின்னடைவுக்கு தமிழர்களின் சினிமா மோகம்தான் காரணம் என ஒருசில அரசியல்வாதிகள் மேடைதோறும் முழங்கி வருகிறார்கள்.
சினிமாவிலிருந்து அரசியலுக்கு வருகிறவர்கள் தங்களது வாக்கு வங்கியை பங்கு போடுவதால் ஏற்பட்டஎரிச்சலில் அவர்கள் செய்யும் பிரச்சாரம் இது. விவாதிக்க வேண்டிய, போராட வேண்டிய எத்தனையோ மக்கள் பிரச்சனைகள் இருக்கையில் சினிமா மோகம் என்ற ஒற்றை கருத்துடன் அவர்கள் கூவுவது அவர்களின் உள்ளக்கிடக்கையை வெளிக்காட்டிவிடுகிறது.
ஆனாலும் அவர்கள் கூறும் கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. கலைத்துறையானாலும், அரசியலானாலும் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தனி மனித வழிபாடும், சினிமா நட்சத்திரங்களை அரசியல்வாதிகளாக உருமாற்றும் முனைப்பும் தமிழ்நாட்டில்தான் அதிகம். இந்த இரண்டும் அதிகமுள்ள மாநிலமாக முன்பு ஆந்திரா விளங்கியது. கட்சியை நடத்த முடியாமல் பிரஜா ராஜ்ஜியத்தை சிரஞ்சீவி காங்கிரஸுடன் இணைத்த நிகழ்வு, ஆந்திர மக்களின் விழிப்புணர்வை காட்டுவதாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். பிரஜா ராஜ்ஜியத்தின் அழிவை முன்னிறுத்தி நமது சினிமா மோகத்தை ஆராய வேண்டிய கட்டாயத்தில் தமிழர்களாகிய நாம் இருக்கிறோம்.
ஆந்திராவில் அளப்பரிய ரசிகர்களுடன் சூப்பர் ஸ்டாராக விளங்கியவர் சிரஞ்சீவி. அவரளவுக்கு மக்கள் ஆதரவு கொண்ட சினிமா நட்சத்திரம் அங்கில்லை. விஜயசாந்தியும்கூட ஒரு கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டே அரசியல் அரங்கில் தொடர முடிகிறது. பெரும் மக்கள் ஆதரவு உள்ள சிரஞ்சீவியால்கூட கட்சியை தொடர்ந்து நடத்த முடியவில்லை என்பது சினிமா மோகத்தை அம்மாநில மக்கள் விலக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்ற ஆரோக்கியமான அம்சத்தின் முதல் வெளிப்பாடு. ஆனால் தமிழகம்...?
ஐம்பது வயது வரை நடிகைகளின் தொப்புளில் பம்பரம்விட்டுக் கொண்டிருந்தவர்கள் திடீரென கட்சி ஆரம்பித்து ஊழலை ஒழிப்பேன் என்று சொல்லும் போது எந்தக் கேள்வியும் கேட்காமல் நாம் பின்னால் செல்கிறோம். 25 வருடங்களாக திரையுலகில் நீடித்தும் ஒரு சிறந்த படத்தை தர இயலாதவர்கள் எப்படி நல்லாட்சி தருவார்கள் என்றும் நாம் யோசிப்பதில்லை. சிரஞ்சீவியால் ஆந்திராவில் கட்சியை நடத்தவே முடியவில்லை. ஆனால் தமிழகத்தில் விஜயகாந்த் அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து நிற்கிறார்.
இந்த வித்தியாசம் எப்படி வந்தது? இத்தனைக்கும் சிரஞ்சீவி அளவுக்கு ரத்ததானம் போன்ற விழிப்புணர்வு செயல்பாட்டில் தன்னையோ தனது ரசிகர்களையோ ஈடுபடுத்திக் கொண்டவரல்ல விஜயகாந்த். சரி, ஏதேனும் உருப்படியான போராட்டம்? பொருளாதார அறிவு? ஏதேனும் சாதனைகள்? ம்ஹும்... எதுவுமில்லை.

என்னையும் ஞாபகம் வைத்துகொண்டதற்கு நன்றி..
பதிலளிநீக்குஎன் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அதனால் கடந்த வாரம் பதிவிடவில்லை..
See,
http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_10.html