உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/02/02

டிஜிட்டல் செத்தவீடு

நேரம் அகாலத்தைக் கடந்திருந்தது. இன்னும் சிலமணித்தியாலங்களில் பொழுது பொலபொலவென விடிந்துவிடும். ஆனாலும் சூரியனின் கதிர்கள் பூமியைத் தொடுவதற்கிடையில்  வேலை முடிந்துவிட வேண்டும்
என்ற அவசரத்துடன் அந்த மோட்டார் சைக்கிள் பனியைக் குடித்துக்கொண்டு விரைந்து கொண்டிருந்தது.

அரைமணித்தியாலப் பயணத்தின் பின் ஸ்ரூடியோ ஒன்றின் முன்னால் அந்தமோட்டார் சைக்கிள் தன் செயற்பாட்டை நிறுத்திக்கொள்ள, ஸ்ரூடியோவின் கதவு தட்டப்பட்டது.
 கொலைகளும் கொள்ளைகளும் மலிந்துவிட்ட சூழலில் நள்ளிரவு தாண்டிய பின்னர், இருட்டு வேளையில் கதவு பலமாகத் தட்டப்பட்டதால் அதற்குள் உறங்கிக் கொண்டிருந்த பணியாளர்கள் இருவருக்கும் ஈரற்குலை ஒருநொடியில் தீய்ந்தே போய்விட்டது. நடப்பது நடக்கட்டும் என்ற நினைப்போடு எச்சரிக்கையுடன் கதவைத் திறந்தனர். வெளியே  முகத்தில் பதற்றத்தை ஏந்தியபடி இருவர் நின்றிருந்தனர்.
   "அண்ணை! ஆரண்ணை நீங்கள்? இந்த நேரத்தில வந்திருக்கிறீங்கள்?'' குரலில் கொஞ்சம் உஷாரை ஏற்றிக் கொண்டு பணியாளர்களிடமிருந்து கேள்வியெழுந்தது.
 ஒரு அவசரமான அலுவல். அதுவும் விடியிறதுக்கிடையில முடிக்கவேணும் வந்தவர்கள் பொய் சொல்லவில்லையென்பதை அவர்களது கண்களே சொல்லிநின்றன. பணியாளர்களுக்கு இப்போது பயம் பறந்தே போய்விட்டது.
 "அப்பிடியென்ன அவசர அலுவல்? அண்ணை! நாங்கள்  ஓவர்நைட் வேலை செய்திட்டு கொஞ்சம் முந்தித்தான் படுத்தனாங்கள். என்ன அலுவல் எண்டாலும் விடிய வாங்கோவன்'' கூறிக் கொண்டே கதவைச்  சாத்த முயன்றனர் பணியாளர்கள். 
ஆனால் வந்தவர்கள் ஒற்றைக்காலில் நின்றார்கள்.
 "அண்ணை! 2 டிஜிட்டல் பனர் அடிக்கவேணும். காசு எவ்வளவு எண்டாலும் பரவாயில்லை. விடியிறதுக் கிடையில கட்ட வேணும்.'' "பனரோ? என்னண்ணை? விளையாடுறிங்களோ? அது எவ்வளவு மினக்கெடு எண்டு தெரியுமே?'' பணியாளர்கள் ஏதாவது சாக்குப்போக்குச்சொல்லி அவர்களைக் கலைத்துவிட்டுத் தமது நித்திரையைத் தொடர முயற்சித்தனர். 
அப்படியிருந்தும் வந்தவர்கள் விடுவதாயில்லை. நீண்டநேரக் கெஞ்சுதலுக்குப் பிறகு, தமது நித்திரையைத் தியாகம் செய்யப் பணியாளர்கள் முடிவு செய்தனர். பின்னர் காரியங்கள் மளமளவென்று நடந்தேறின. 
கிட்டத்தட்ட ஒருமணித்தியால மினக்கெடலின் பின்னர் டிஜிட்டல் பனரோடு வந்தவர்கள் வாயெல்லாம் பல்லாக விரைந்து சென்றனர். பணியாளர்களும் பொக்கற் நிறைந்த மகிழ்வோடு இரண்டாம் கட்ட நித்திரைக்குச் சென்றனர்.
அது சரி. இவ்வளவு அவசரமாக அவர்கள் செய்து கொண்டு செல்லும் பனர் என்ன தெரியுமா?
வேறொன்றுமில்லை. ஒரு கண்ணீர் அஞ்சலிதான். அதுவும் நான்கு நாள்களுக்கு முன்னர் இறந்து, விடிந்தவுடன் சுடலையில் தகனமாகப் போகும் ஒரு முதியவருக்கான கண்ணீர் அஞ்சலி. நேற்று வரைக்கும் அந்த முதியவரின் சடலம் கருவாடு காயவைத்தது போல , வெளிநாட்டில் இருந்து மகன் வருவதற்காகக் காத்திருந்தபோது கூட இவர்களுக்கு இப்படி பனர் வைக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்த தில்லை.
வெளிநாட்டு மகன் வந்தவுடன், ஊரிலிருந்த இவர்களுக்குப் போட்டியான சனசமூக நிலையக்காரர் முதல் நாள் மாலைக் கருக்கலில் இப்படியான ஒரு பனரை கட்டிவிட்டார்கள். அவர்கள் செய்கின்ற போது சும்மாயிருந்தால் இவர்களுக்கு அவமானமல்லவா? எனவே களத்தில் இறங்கி, காசு சேர்த்து விடியப்புறமாக டிஜிட்டல் பனரையும் செய்து, இதோ கட்டித் தொங்கவும் விட்டுவிட்டார்கள்.
மரணவீடுகளில் இப்போதெல்லாம் இவ்வாறன டிஜிட்டல் பனர் செய்து, தொங்க விடுவது ஒரு பஷனாகவே மாறத் தொடங்கிவிட்டது.
சடலத்தைக் கொண்டு செல்வதற்கு சவப்பெட்டி எடுக்கிறார்களோ இல்லையோ மறக்காமல், இப்படியான டிஜிட்டல் பனர்களைச் செய்து ஊரெல்லாம் தொங்க விடுவதற்கு மட்டும் எவரும் தயங்குவதில்லை. இதன்மூலம் தமது பணபலத்தையும் படோடாபத்தையும் காட்டுவதனைப் பலரும் பெருமையாகவும் கருதத் தொடங்கிவிட்டார்கள். போதாக்குறைக்கு அண்மையில் ஒரு மரணச்சடங்கில் ஒப்பாரி வைத்து அழுவதைக்கூட ஒலிபெருக்கி மூலம் ஊரெங்கும்  கேட்கும்படி செய்தார்கள். இவர்களிடத்தே ஒரு சின்ன வேண்டுதல்.
உங்கள் உறவுகள் உயிருடன் இருக்கும்போது உங்கள் அன்பைக் காட்டுங்கள்.
இருக்கும்போது அவர்களிடத்தே கஞ்சத்தனமாக நடந்துவிட்டு, இறந்த பின்னர் பனர் கட்டுவதாலோ, ஒப்பாரியை ஒலிபரப்புவதாலோ இறந்தவர்கள் அகமகிழப்போவதில்லை. மாறாக மற்றவர்களின் கேலிப்பார்வைதான் உங்களை நோக்கி நெருங்கி வரும்

நன்றி- உதயன் var maxresults=14;

3 கருத்துகள்:

  1. ஒரு நாளைக்கு 1 (அ) 2 பதிவு போதும் நண்பரே... அப்போதுதான் அது பலரையும் சென்றடையும்..

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் உறவே உங்கள் வலைத்தளத்தினை இங்கேயும் இணையுங்கள்....

    http://meenakam.com/topsites


    http://meenagam.org

    பதிலளிநீக்கு

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.