உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/02/09

வானத்தில் செவ்வாய் இரவு மர்ம வெளிச்சம்


கொழும்பின் வான் பகுதியில் கடந்த செவ்வாய் இரவு தோன்றிய அதிபிரகாசமான மர்ம வெளிச்சம் அப்பகுதி மக்களை அச்சத்துக்குள்ளாக்கியுள்ளதுடன், பொலிசார் அது தொடர்பாக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பை அண்மித்த கடுவெலை மற்றும் பியகம பிரதேசங்களுக்கு இடைப்பட்ட வான்வெளியில் குறித்த மர்ம வெளிச்சம் தென்பட்டதாக அதனைக் கண்டவர்களின் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
அதனை முதலில் விமானமொன்றின் விமானியே கண்ணுற்றுள்ளார். கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து மேலெழுந்த அவரது விமானத்தை நோக்கி பியகம வான் பகுதியிலிருந்து அதிபிரகாசமான வெளிச்சம் பாய்ச்சப்பட்டுள்ளது.
அதன் பின் சற்று நேரம் கழித்து அந்த வெளிச்சத்தை முல்லேரியா பிரதேச மக்கள் கண்ணுற்றுள்ளனர். அந்த மர்ம வெளிச்சம் மிக வேகமாக வானில் நகர்ந்து சென்றதை அவர்கள் கண்ணுற்றுள்ளனர்.
பிரஸ்தாப மர்ம வெளிச்சம் தொடர்பாக பொலிசார் தற்போது தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.