உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/02/15

போராளி குழுவில் நான் ஒருத்திதான் பெண்.அழகர் மலை' படத்துக்குப் பின் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் "சட்டப்படி குற்றம்' படத்தில் நடிக்கிறார் பானு.


ஆச்சரியமாக முதல் படமே கிளாமர், காதல் என நல்ல வாய்ப்பாக அமைந்தும் பெரிதாக நீங்கள் ஏன் வெளிப்படவில்லை?


"தாமிரபரணி' படம்தானே? கிளாமர், காதல், சென்டிமென்ட், தாய், தந்தை பாசம் என எல்லாமே அந்தப் படத்தில் இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த படம். பிளஸ் டூ முடித்ததும் கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு. அந்த சிறிய வயதில் நானே எதிர்பார்க்காதது அது.


அதை தக்கவைத்து பெரிய இடத்துக்கு போகலாம் என்றிருந்தேன். ஆனால் அதன்பிறகு வந்த கேரக்டர்கள் எல்லாம் வேறு மாதிரியாக இருந்தது. கிளாமர் வாய்ப்புகள் நிறைய வந்தன. என்னை பார்த்து ஏன் அப்படி நினைத்தார்கள்? எனத் தெரியவில்லை.


"தாமிரபரணி'யில் நடிப்புக்கு உதாரணமாக நிறைய காட்சிகள் இருந்த போதிலும், படத்தில் வந்த ""கறுப்பான கையாலே...'' என்ற பாடலில் என் நடனம் நன்றாக இருந்தாக பலர் பாராட்டினார்கள். எனக்கு அதை கேட்டு வியப்பு. கிளாமர் வேடத்துக்குதான் இந்த பெண் பொருத்தமானவள் என பலர் நினைத்ததால், சினிமாவை விட்டு கொஞ்சம் விலகியிருந்தேன். அதை விடுங்கள் இனிதான் நிறைய நேரம் இருக்கிறதே?


கிளாமரும் படத்துக்கு முக்கியம்தானே?


கிளாமர் வேண்டும்தான். ஆனால் அது மட்டுமே முக்கியம் இல்லையே? கிளாமர் வேடங்களில் எனக்கு சுத்தமாக இஷ்டம் இல்லை என சொல்லவில்லை. அது மாதிரியான வாய்ப்புகள் தொடர்ந்து வந்தததால்தான் சினிமாவுக்கு இடைவெளி விட்டேன்.  அந்த இடைவெளிக்குப் பின் நடித்த "அழகர் மலை' படத்திலும் கிளாமர் இருந்தது.


அது நிச்சயம் உங்களை உறுத்தியிருக்காது. கிளாமர் வேடங்களை ஏற்பேன். ஆனால் அதில் எல்லை வேண்டும். நல்ல சினிமாக்களில் நடிப்பதன் மூலம் கிடைக்கும் பெயரை மட்டுமே எதிர்பார்க்கிறேன். தமிழில் இப்போது நிறைய எதார்த்த சினிமாக்கள் வருகின்றன. அந்த வாய்ப்புகள் கிடைத்தால் மகிழ்வேன்.


மலையாள சினிமாக்களில்
அதிக கவனம் செலுத்தி வருகிறீர்களாமே?நான் பிறந்து, வளர்ந்து, படித்தது எல்லாம் கேரள மாநிலம் கொச்சி.  ஆறாம் வகுப்பு படிக்கும் போதே மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி விட்டேன். எட்டாம் வகுப்பு படிக்கும் போதே "அச்சில் ஒருங்கத்து வீடு' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தேன்.


அப்போது நிறைய சினிமா வாய்ப்புகள். ஆனால் எதையும் ஏற்கவில்லை. பள்ளிப் படிப்பை முடித்தாக வேண்டும் என்று இருந்தேன். பிளஸ் டூ முடித்ததும்தான் சென்னை வந்தேன். பின்புதான் "தாமிரபரணி' வாய்ப்பு.  "தாமிரபரணி' படத்துக்குப் பின் தமிழில் நடிக்காமல் இருந்தபோது, மலையாளத்தில் நான்கு சினிமாக்களை முடித்து விட்டேன். எல்லாம் புது மாதிரியான களம். நல்ல நடிகை என மலையாளத்தில் பெயரெடுத்து விட்டேன்.


இப்போது "ஃபிலிம் ஸ்டார்' என்று ஒரு படம், வினுமோகனின் ஜோடியாக ஒரு படம். ஷூட்டிங் ஆரம்பித்து விட்டது. மலையாள சினிமாவில் எடுத்த பெயரை தமிழிலும் எடுக்காமல் விட மாட்டேன்.


சட்டப்படி குற்றம்....?


நான் எதிர்பார்த்ததை போலவே தமிழில் எனக்கொரு படம் கிடைத்திருக்கிறது. எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் நடிக்க அழைப்பு வந்த போதே நிறைய எதிர்பார்ப்பு வந்தது. அவரின் படங்களை சிறு வயதில் பார்த்திருக்கிறேன். அந்த நம்பிக்கைதான் இதற்கு காரணம். கதையை கேட்டவுடன் இந்த கேரக்டரை எனக்கு கொடுத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன்.


அதையே கொடுத்து ஆச்சரியப்படுத்தினார். எனக்கு போராளி வேடம்.  சத்யராஜ், விக்ராந்த் உள்ளிட்ட பலருக்கும் அந்த வேடம்தான். அவர்களின் தலைமையில் செயல்படும் போராளி குழுவில் நான் ஒருத்திதான் பெண். சஸ்பென்ஸ் நிறைய இருக்கிறது. அதை இப்போது சொன்னால் சுவாரஸ்யம் போய் விடும். நிச்சயம் படம் பிரமிப்பாக இருக்கும்
ஓய்.........ஓய்....


படிச்சிட்டு சத்தம் போடாம 
போகலாமா நன்றி மறப்பது நன்றன்று! 


உங்க கருத்தையும் சொல்லி,
வோட்டும் போட்டா,
நாம சந்தோசப்படுவமில்ல. ok.. ok...


1 கருத்து:

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.