உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/02/18

நடிகனாக ஆகியிராவிட்டால் தாதாவாக மாறியிருப்பேன்! : ரஜி​னி

"எந்​தி​ரன்' படத்​திற்​காக எந்​தி​ர​மாய் உழைத்த ரஜினி அதன் வெற்​றி​யால் உற்​சா​க​மாகி இருக்​கி​றார்.​ நடிப்பதில் மட்​டுமல்ல...​ நின்​றால்,​​ நடந்​தால்,​​ பேசினால் கூட ஸ்டைல்​தான்
என்​னும் அள​விற்கு ரசி​கர் கூட்​டத்​தின் அபி​மா​னத்​தைப் பெற்ற அவ​ருக்கு தற்​போது வயது 61.​ சென்ற டிசம்பரில் 12ம் தேதி எந்த ஆரா​வா​ர​மும்மின்றி தன்​னு​டைய பிறந்த நாளை​யும்,​​ "அறு​ப​தாம் கல்​யாண'த்தை​யும் சிறப்​பாக கொண்​டா​டி​யி​ருக்​கி​றார் ரஜினி.​ சமீ​பத்​தில் அவர் ஓர் ஆங்​கில இத​ழுக்​குப் பேட்டி அளித்​தி​ருந்​தார்.​ ரஜி​னி​யைப் போலவே விறு​வி​றுப்​பும்,​​ பர​ப​ரப்​பும் நிறைந்த அந்​தப் பேட்டி இதோ.​
​ ​ ​ ​
இப்​போ​தெல்​லாம் பத்​தி​ரி​கை​க​ளுக்கு பேட்​டி​கள் கூட கொடுக்க முடி​யாத அள​விற்கு நீங்​கள் மாறிப் போன​தன் பின்​னணி என்ன?​


நோ நோ...​ நான் மாற​வில்லை.​ அதே ரஜி​னி​தான்.​ இப்போதெல்​லாம் நான் யாருக்​கும் பேட்​டி​கள் கொடுப்​ப​தில்லை.​ ஏனென்றால் பேப்​பர்,​​ சேனல்ஸ் அனைத்தும் எக்ஸ்க்​ளூ​ஸிவா பேட்டி வேணும்னு கேட்​கி​றாங்க.​ ஒருத்​த​ருக்​குக் கொடுத்து இன்​னொ​ருத்​த​ருக்​குக் கொடுக்​க​லேன்னா மத்​த​வங்க தப்பா நினைப்​பாங்க.​ இதை​விட,​​ எல்​லா​ருக்​குமே நோ சொல்​லிட்டா பிரச்​சினை இல்ல பாருங்க..​ மத்​த​படி மீடியா இன்​னிக்கு ரொம்ப பவர்​ஃ​புல்​லாயி​டுச்சி...​


"எந்​தி​ரன்' படத்​தின் வெற்றி உங்​களை ரொம்​ப​வும் ரிலாக்​ஸ் ஆக்​கி​டுச்சோ....!​​


ஓ யெஸ்...​ ஒரு மாநில மொழிப் படத்​தில் முதல் முறையா இவ்​வ​ளவு பெரிய முத​லீடு செஞ்​சி​ருக்​காங்க.​ இது தமாஷ் இல்ல.​ கலா​நிதி மாறன் தைரி​யத்​துக்கு பாராட்​டுக்​கள்.​ அவர் இந்​தக் கதையை நம்​பி​னார்.​ எந்​தத் தப்​பும் நடக்​கலை.​ அது ஒரு பெரிய பொறுப்பு...​ கட​வுள் அரு​ளால எல்லாம் நல்​ல​ப​டியா நடந்​தது.​


இந்​தப் படத்​திற்கு சம்​ப​ள​மாக ஆரம்​பத்​தில் நீங்​கள் ஒரு பைசா கூட வாங்​க​வில்லை என்று கூறப்​பட்​டதே...?​​


சம் ப​ளத்தை அப்​பு​றமா கொடுங்​கன்னு நான்​தான் அவங்​க​கிட்ட சொன்​னேன்.​ அப்​பு​றமா வாங்​கிக்​கிட்​டேன் ​(சிரிப்பு)​.​ எனக்கு இப்போ பணம் வேணாம்னு அவங்​க​கிட்ட முதல்​லயே சொல்​லிட்​டேன்.​ எனக்​குத் தேவைன்னா நான் நிச்​ச​யம் கேட்டு வாங்​கிக்​கு​வேன்.​ அப்​படி ஒரு தேவை இல்லாத பட்​சத்​தில் எதுக்கு ...​ படத்​துக்​காக ஏற்​கெ​னவே நிறைய செலவு செய்​தி​ருக்​காங்க.​ அது​மட்​டு​மில்​லாம கலா​நிதி மாறன் என்​னோட நல்ல நண்​ப​ரும் கூட.​


நீங்கள் நடிக்​கும் படம் தயா​ரா​கும்​போது நயா பைசா வாங்​கு​வ​தில்லை என்​றும் அப்​பு​றம் படத்​தின் லாபத்​தில் ஒரு பகு​தியை வாங்கிக் கொள்வதா​க​வும் சொல்​கி​றார்​களே?​​



உண்​மை​தான்...​


இந்​தி​யா​வில் அதிக சம்​ப​ளம் பெறும் நடி​க​ராக உங்​களை மாற்​றி​யது எது?​​


(சிரிக்​கி​றார்)​


நாங்​கள் சொல்​வது சரி​தானா?​​


மத்த நடி​கர்​கள் எவ்​வ​ளவு வாங்​கு​றாங்​கன்னு எனக்​குத் தெரி​யல!​


​(மீண்​டும் சிரிக்​கி​றார்).


முன்பு ஒரு முறை,​​ "நான் நடி​க​னா​கா​மல் இருந்​தி​ருந்​தால் பணத்​துக்​கா​கக் கடத்​தல்​கா​ர​னாக மாறி​யி​ருப்​பேன்' என்​றீர்​களே...​ நினை​வி​ருக்​கி​றதா?​​

ஆமாம்... ​ உண்​மை​தான்...​ நான் ஒரு ​ நடி​க​னாக ஆகி​யி​ரா​விட்​டால் "தாதா'வாக மாறி​யி​ருப்​பேன்.​ ஆனால் அந்​தக் கட்​டத்​தைக் கடந்து விட்​டேன்.​ இப்போது என்​னி​டம் தேவை​யான அளவு பணம் இருக்கு.​


"எந்​தி​ரன்' ரிலீ​ஸூக்​குப் பிறகு இம​ய​மலை சென்​று​விட்​டீர்​களே?​​

ஒவ்வொரு படத்​தின் ரிலீ​ஸூக்​குப் பிற​கும் நான் இம​ய​ம​லைக்​குப் போவது வழக்​கம்.​ தனி​யா​கத்​தான் செல்​வேன்.​ துணைக்கு யாரை​யும் அழைத்​துச் செல்​வ​தில்லை.​


அங்கே உங்​க​ளைக் காணக் கூட்​டம் கூடி​வி​டாதா?​​

இல்லை. ​ நான் ரொம்ப உள்ளே இருக்​கிற இம​ய​மலை கிரா​மங்​க​ளுக்​குப் போவேன்.​ அங்கே இருப்​பதே ஒரு தியா​னம் மாதி​ரி​தான்.​ அந்த கங்கை,​​ புனி​த​மான மலை,​​ அத​னு​டைய அழகு,​​ அங்​குள்ள கள்​ளங்​க​ப​ட​மற்ற மனி​தர்​கள் எல்​லாம் வித்​தி​யா​ச​மா​னது.​ நான் அங்கே பலமுறை போயிருக்கேன்.​ 1995ஆம் ஆண்டு தொடங்கி 15 வரு​டங்​க​ளாக போய்க்​கொண்​டி​ருக்​கி​றேன்.​

மகன் இல்​லையே என்று நீங்​கள் எப்​போ​தா​வது வருத்​தப்​பட்​ட​துண்டா?​​

நோ...நோ... ​ கட​வுள் ஆசீர்​வா​தத்​தால நான் ரொம்ப சந்​தோ​ஷமா இருக்​கேன்.​ இன்​னிக்கு 21-ம் நூற்​றாண்​டில் இருக்​கோம்.​ ஆண்,​​ பெண் என்பதெல்லாம் ஒன்​று​மில்லை.​ இன்​னிக்கு என்​னோட ரெண்டு பேரன்​கள் யாத்ரா,​​ லிங்​கா​வைப் பாருங்க.​ ​(பேரன்​க​ளு​டன் ரஜினி இருக்​கும் ஃபி​ரேம் செய்து மாட்​டப்​பட்ட படத்​தைக் காட்​டு​கி​றார்)​


நீங்க நல்ல தாத்​தாவா
?​​


யா..​ வெரி லவ்​விங்..​


மற்ற எந்த நட்​சத்​தி​ரங்​க​ளும் செய்​யா​ததை நீங்க செய்​றீங்க.​ குர்தா போடாம,​​ டை கூட அடிக்​காம,​​ இதே வழுக்​கைத் தலை​யோட வெளி​யில வர்றீங்க.​ உங்க ரசி​கர்​கள் இதை எப்​படி எடுத்​துக்​கி​றாங்க?​​

ஸ்க்​ரீன்ல நான் எப்​ப​டி​யி​ருக்​கேன்​கி​ற​து​தான் அவங்​க​ளுக்கு முக்​கி​யம்.​ அதுக்​கு​தான் அவங்க பணம் செலவு பண்ணி பாக்​க​றாங்க.​ அவங்​க​ளுக்கு தங்​க​ளோட ஹீரோ பக்கா ஹீரோவா இருக்​க​ணும்.​ வெளி​யில எப்​படி இருந்​தா​லும் கவ​லைப்​பட மாட்​டாங்க.​ மக்​கள் புத்​தி​சா​லி​கள்.​ அவங்​க​ளுக்கு எல்​லாம் தெரி​யும்.​ எதுக்​குத் தேவை​யில்​லாம நம்மை நாமே சங்​க​டப்​ப​டுத்​திக்​க​ணும்?​​


நீங்க நீங்​க​ளாவே இருக்​கி​றதை அவங்க பாராட்​டு​றாங்க இல்​லையா?​​


அது இயல்​பு​தானே...​ ஆனா சினி​மா​வுல இப்​ப​டியே வந்தா அவங்க விரும்ப மாட்​டாங்க.​ நிஜத்​துல ஓ.கே.​ சினி​மா​வுல அவங்​க​ளுக்கு ஹீரோ​தான் தேவை.​


இன்​னும் உங்​களை ஆக்​டிவ்வா வைச்​சி​ருக்​கி​ற​துக்கு என்ன கார​ணம்?​​



நான் யோகா, எக்​ஸர்​சைஸ் பண்​றேன்.​ இது​தான் என் மூல​த​னம்.​ ஒரு ஆர்​டிஸ்ட்​டுக்கு இந்த மூல​த​னம் ரொம்ப முக்​கி​யம்.​ ஆனா மனசை ஃபிட்டா வச்​சிக்க நல்ல எழுத்​தா​ளர்​கள்,​​ இயக்​கு​நர்​கள் இருக்​காங்க.​


"எந்திர'னில் நீங்​கள் எல்​லாம் செய்​தீர்​கள்.​ ஒரு இளம் நாய​கி​யு​டன் காதல் காட்​சி​க​ளில் நடித்​தீர்​கள் என்​றா​லும் வய​தா​கி​றதே என்ற மன அழுத்தத்தை உணர்​கி​றீர்​களா?​​


​ (மனம் விட்டு சிரிக்​கி​றார்)​ சில நேரங்​கள்ல சண்​டைக் காட்​சி​க​ளில் நடிக்​கும்​போது,​​ டான்ஸ் பண்​ணும்​போது வய​சான ஃபீல் வரும்.​ வய​சா​கி​றது நிஜம்​தானே...?​ ஆனா டெக்​னீ​ஷி​யன்​கள்,​​ டைரக்​டர்​க​ளுக்​கும் தெரி​யும்.​ அவங்க மேனேஜ் பண்​ணி​ட​றாங்க.​ காதல் காட்​சி​கள்ல நடிக்​கும்​போது எனக்கே கொஞ்​சம் சங்​க​ட​மாத்​தான் இருக்கு.​ நடிப்​பு​தா​னேன்னு சொன்​னா​லும் கொஞ்​சம் சங்​க​டமா இருக்கு.​

"எந்​தி​ரனு'க்கு அப்​பு​றம் என்ன?​​


ஒரு அனி​மே​ஷன் படம்.​ "ஹரா'ன்னு தலைப்பு.​ ஒரு பாதி அனி​மே​ஷன்,​​ மீதி பாதி லைவ்.​ ​ "அவ​தார்' மாதிரி.​ ஆனா முழுசா ஒரு ரஜி​னி​காந்த் படம் கொடுப்​பது பற்றி இன்​னும் முடி​வெ​டுக்​கல.​


யாஷ் சோப்ரா உங்​களை "தூம் 3' படத்​தில் நடிக்​கக் கூப்​பிட்​டதா சொல்​றாங்​களே?​​


அது முழுக்க முழுக்க வதந்​தி​தான்.​ என்னை அவங்க அப்​ரோச் பண்​ணல.​ எனிவே...​ "ஹரா' முடிஞ்ச பிறகு 6 மாச​மா​வது எனக்கு இடை​வெளி தேவை.​ எனக்​குப் பொருத்​த​மான நல்ல கேரக்​டர்,​​ ரோல் கிடைச்சா...​ நல்ல தயா​ரிப்​பா​ளர்,​​ இயக்​கு​நர்​கள் அமைந்​தால்...​ நிச்​ச​யம் அடுத்த படம் பண்​ணு​வேன்.​ இல்​லேன்னா போதும்...​ இப்ப எனக்கு 61 வயசு ஆயி​டுச்சு!​''​

அமி​தாப் இப்​ப​வும் நடிக்​கி​றாரே?​​


அவர் ​தான் எனக்கு முன்​னு​தா​ர​ணம்...​ ஆக்​சு​வலா திலீப்​கு​மார்​தான் எங்​க​ளுக்​கெல்​லாம் மையப் புள்ளி.​ அமித்ஜி,​​ நான்,​​ ஷாரூக்,​​ அமீ​ருக்​கெல்​லாம் திலீப்​கு​மார்​தான் இன்ஸ்​பி​ரே​ஷன்!​​


உங்​க​ளுக்கு மும்பை காற்று மீது அலா​தி​யான காதல் இருக்​கி​றது.​ அதை இப்​போது கொஞ்​சம் இழந்​து​விட்​ட​தாக உணர்​கி​றீர்​களா?​​


அமிதாப் போன்​ற​வர்​க​ளோடு நெருக்​க​மா​கப் பழ​கிப் பேசும் வாய்ப்பு எத்​த​னைப் பேருக்​குக் கிடைக்​கும்?​ நான் ரொம்ப அதிர்ஷ்​டக்​கா​ரன்.​ நானும் அமி​தாப்​பும்,​​ "அந்தா கானூன்',​ "கிரா​ஃப்​தார்',​ "ஹம்னு' என்று மூன்று படங்​க​ளில் சேர்ந்து நடித்​தோம்.​ மூணுமே சூப்​பர் டூப்​பர் ஹிட்ஸ்!​ சில நேரங்​கள்ல மும்​பைக்கு போய் நண்​பர்​க​ளைப் பார்க்​க​ணும்னு தோணும்.​ அங்கே சுபாஷ் கய்,​​ சன்னி தியோல்,​​ ரிஷி கபூர்,​​ ஜித்​தேந்​திரா என்று எனக்கு நிறைய நண்​பர்​கள் இருக்​கி​றார்​கள்.​


ஏன் ஹிந்​திப் படங்​க​ளில் நடிப்​பதை விட்​டுட்​டீங்க?​​


அதை நானா​கத்​தான் குறைச்​சிக்​கிட்​டேன்.​ இங்கே ரெண்டு வரு​ஷத்​துக்கு ஒரு படம்​தான் பண்​றேன்.​ ரெண்டு குதி​ரைல ஒரே நேரத்​துல சவாரி பண்​றது கஷ்​டம்.​ ஹிந்​திப் படங்​க​ளில் வேலை பாக்​கு​ற​துக்​கும்,​​ தெற்​கில் பணி​யாற்​று​வ​தற்​கும் நிறைய வித்​தி​யா​சம் இருக்கு.​ அங்கே போது​மான அளவு செஞ்​சிட்​டேன்.​ ஹிந்​தி​யில கிட்​டத்​தட்ட 25-27 படங்​கள் பண்​ணிட்​டேன்.​ அங்கே 10 வரு​ஷம் வொர்க் பண்​ணி​யி​ருக்​கேன்.​ அந்த வாழ்க்​கையை அனு​ப​விச்​சேன்.​


உங்​க​ளைப் பற்​றிய மக்​க​ளின் எதிர்​பார்ப்பு அதி​க​மாக இருக்​கி​றது.​ அதற்கு என்ன செய்​யப் போகி​றீர்​கள்?​​

அவங்க எதிர்​பார்ப்பு அதி​கம்​தான்.​ படத்​துக்​குப் படம்,​​ அடுத்து வித்​தி​யா​சமா என்ன செய்​ய​லாம்​கிற பொறுப்​பு​தான் பெரிய அழுத்​தம்.​ அடுத்து என்ன பண்​றது?​ எப்​படி பெரிசா பண்​றது?​ அந்​தப் படம் வித்​தி​யா​ச​மா​க​வும் இருக்​க​ணும்.​ பொழுது போக்​கா​க​வும் இருக்​க​ணும்.​ ரொம்ப உப​தே​சம் பண்ற மாதி​ரியோ,​​ ​ ஆர்ட் ஃபி​லிம் மாதி​ரியோ இருக்​கக்​கூ​டாது.​ அவார்ட் படம் மாதிரி இருக்​கக்​கூ​டாது.​ ஆனால் நல்ல தர​மான பொழு​து​போக்​குப் படமா இருக்​க​ணும்.​ அதுக்​காக ரொம்ப சீப்பா இருக்​கக் கூடாது.​ அந்த வகை​யில் "எந்​தி​ரன்' நல்ல பொழு​து​போக்கு படம்.​ வித்​தி​யா​ச​மான பரி​மா​ணம்.​


"எந்தி​ரன்' படத்​தில் முத​லில் ஷாருக்​கான் நடிக்​க​வி​ருந்​தார்.​ அது கைவி​டப்​பட்டு நீங்​கள் நடித்​தீர்​கள்.​ இதை எப்​படி எடுத்​துக் கொண்​டீர்​கள்?​


இந்தக் கதை முத​லில் கம​லுக்​குப் போனது.​ ப்ரீத்தி ஜிந்​தாவை ஹீரோ​யி​னாக நடிக்க வைக்க முடிவு செய்து பூஜை கூடப் போட்​டார்​கள்.​ ஆனால் கால்​ஷீட் பிரச்​சினை என்று நினைக்​கி​றேன்.​ படம் ட்ராப் ஆகி​விட்​டது.​ அப்​பு​றம் ஷாரூக்​கி​டம் போனது.​ அங்கே பட்​ஜெட் பிரச்​சி​னை​யா​கி​விட்​டது.​ அத​னால் அவர் நடிக்​க​வில்லை.​ பிற​கு​தான் நான் நடிக்க வேண்​டிய சூழ்​நிலை ஏற்​பட்​டது.​ ​


நீங்​கள் நடித்த "சிவாஜி' பட​மும் நன்​றாக ஓடி​யதே?​


ஆமாம். ​ முதல் முறையா 75 முதல் 80 கோடி வரை ஒரு மாநில மொழிப் படத்​துக்கு செல​வ​ழித்து,​​ அதில் 110 முதல் 120 கோடி வரை லாபம் பார்த்​தாங்க.​ அது ரொம்ப உற்​சா​கம் தந்​தது.​ என்​னு​டைய மார்க்​கெட்​டை​யும் விரி​வு​ப​டுத்​துச்சி.​


"எந்திரன்' படம் கமல்,​​ ஷாரூக்​கா​னி​டம் போய்​விட்டு வந்​ததே என்ற ஈகோ உங்​க​ளுக்கு இல்​லையா?​​


"ஈஹ ​ஹய்ங் க்ஹ​ஹய்ங் டங் ப்ண்ந்ட்ஹ ட்ர்ற்ஹ ட்ஹண் ஓட்​ஹ​ஹய்ங் ஜ்ஹப்ங் ந்ஹ ய்ஹ​ஹம்!​'​ ​(ஒவ்​வொரு தானி​யத்​தி​லும் அதை உண்​ணப் போகி​ற​வ​ரின் பெயர் எழு​தப்​பட்​டி​ருக்​கும்)​.​ ஷங்​கரை எனக்​குத் தெரி​யும்.​ அவ​ரின் திற​மை​கள் பற்​றித் தெரி​யும்.​ அத​னால்​தான் ஒப்​புக் கொண்​டேன்.​ வேறு யாரா​வது வந்து ரூ.200 கோடி​யில படம் எடுக்​க​றதா சொல்​லி​யி​ருந்​தால் நான் தொட்​டி​ருக்​கக் கூட மாட்​டேன்.​ ஷங்​கர் சரியா செய்​வாரு.​ நல்ல படம் தரு​வார்னு எனக்​குத் தெரி​யும்.​ ஹாலி​வுட்​டில் இருந்து வந்து கேட்​டி​ருந்தா கூட நான் ஒத்​துக்​கிட்​டி​ருக்க மாட்​டேன்.​ "சிவாஜி'யில சேர்ந்து வேலை செஞ்​ச​துக்​கப்​பு​றம் ஷங்​கர் ஃபென்​டாஸ்​டிக் டைரக்​டர்னு தெரிஞ்​சிக்​கிட்​டேன்!​''


நீங்​கள் நடித்த "குசே​லன்' படம் சரி​யாக ஓட​வில்​லையே?​​


அது ஒரு நாலஞ்சு நாள் வேல.​ கெஸ்ட் ரோலில்​தான் நடித்​தேன்.​


ஒரு படம் சரி​யாக ஓட​வில்லை என்​றால் ரொம்​ப​வும் வருத்​தப்​ப​டு​வீர்​களா?​

நிச்ச​ய​மாக.​ ரொம்​ப​வும் கஷ்​ட​மாக உணர்​வேன்.​ பல பேரு​டைய பணம்,​​ நம்​பிக்கை.​ அது தோற்​றால் என்னை ரொம்​பவே பாதிக்​கும்.​ அதுல எனக்​கும் பொறுப்​பி​ருப்​பதா உணர்​வேன்.​ மக்​கள்,​​ ரசி​கர்​கள் எல்​லோ​ரும் இந்த ரஜினி மீது வைக்​கும் நம்​பிக்கை தோற்​கும்​போது ரொம்​பவே பாதிக்​கும்.​

1 கருத்து:

  1. நல்ல செய்தி.

    நண்பரே, நான் இலங்கைத் தமிழர் பிரச்சினையை ஆழ்ந்து படித்ததில்லை. ஏதாவது நல்ல பதிவுத்தளம் இருந்தால் அதன் சுட்டி கொடுக்க இயலுமா?

    பதிலளிநீக்கு

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.