உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/02/27

செவ்வாயை ஆராயப் போகும் ஆய்வு ஊர்தி!


செவ்வாய்க் கிரகத்தில் ஆய்வு செய்வதற்கான புதிய நவீன ஆய்வு ஊர்தியை அமெரிக்காவின் `நாசா’ உருவாக்கியுள்ளது. `கிïரியாசிட்டி ‘((Curiosity)) என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ஊர்தியில் உள்ள `சாம்’ (sam) என்ற நவீன அமைப்பு குறிப்பிடத்தக்கது. `சாம்பிள் அனாலிசிஸ் அட் மார்ஸ்’ (Sample Analysis at Mars) எனப்படும் `சாம்’, கிரீன்பெல்ட்டில் உள்ள கோடார்ட் ஸ்பேஸ் பிளைட் சென்டரில் வடிவம் பெற்றுள்ளது.
இந்த `கிïரியாசிட்டி’ ஆய்வு ஊர்தி முந்தைய ஆய்வு ஊர்திகளை விட நவீனமானது மட்டுமல்ல, ஒரு முக்கியமான ஆய்விலும் ஈடுபடப்போகிறது. அதாவது, பூமிவாழ் உயிரினங்களின் கட்டுமானப் பொருட்களான `ஆர்கானிக் மாலிக்ïல்கள்’ செவ்வாய்க் கிரகத்தில் காணப்படுகின்றனவா என்று ஆராயப் போகிறது. அந்த ஆய்வை `சாம்’ மேற்கொள்ளும்.
மேற்கண்ட `ஆர்கானிக் மாலிக்ïல்களில்’ கார்பன், ஹைட்ரஜன் மற்றும் கூடுதல் மூலகங்கள் காணப்படுகின்றன. எந்த உயிரும் இவை இல்லாமல் இருக்க முடியாது.
மிக இலேசான `ஆர்கானிக்’ தடயத்தையும் `கிïரியாசிட்டி’யால் கண்டுபிடிக்க முடியும். முன்பு செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட வேறு எந்த ஆய்வு ஊர்தியையும் விட பல்வேறு வகையான ஆர்கானிக் மூலக்கூறுகளையும் இதனால் கண்டுபிடிக்க முடியும். மேலும் உயிருக்கான வேறு தடயங்கள், முந்தைய சூழ்நிலைகள் குறித்த விவரங்களையும் அளிக்க வல்லது.
கிïரியாசிட்டியில் உள்ள `சாம்’ மற்றும் 9 நவீன உபகரணங்கள், செவ்வாய்க் கிரகத்தின் எந்தப் பகுதியிலாவது உயிர் வாழ்வதற்கான சூழல் உள்ளதா, அக்கிரகத்தில் எப்போதாவது உயிர்கள் காணப்பட்டனவா என்றும் ஆய்வு செய்து தெரிவிக்கும்.
இந்த ஆண்டு இறுதியில், அதாவது டிசம்பர் 18-ம் தேதி விண்வெளிக்கு அனுப்பப்படும் `கிïரியாசிட்டி’, செவ்வாய் நிலப்பரப்பில் 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் போய் இறங்கும். அங்கு இரண்டாண்டு காலத்துக்கு இந்த ஊர்தி ஆய்வில் ஈடுபடப் போகிறது என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.