உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/02/22

தியேட்டர் முன் சிக்கிய ஸ்ரீதேவி


மயிலுக்கு வயசானாலும் ஒயிலுக்கு குறைச்சல் இல்லங்கிற மாதிரிதான் இருக்கிறது அந்த கால ஸ்ரீதேவிக்கு கிடைக்கிற மரியாதையும் மவுசும்! தமிழில் டாப் ஹீரோயினாக பல வருடங்கள் அரசாட்சி செய்த ஸ்ரீதேவி, அப்படியே இந்திக்கு போனார். அங்கேயும் அவர்தான் டாப். அப்புறம் போனிக்கபூரை மணந்து கொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.

இந்த சிவகாசிப் பொண்ணுக்கு இந்தியா முழுவதும் அப்படி ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது இப்போதும். கடந்த சில தினங்களுக்கு முன் ‘எர்ற குலாபி’ என்ற தெலுங்கு படத்தை பார்க்க ஐதராபாத் வந்திருந்தார் ஸ்ரீதேவி. வேறொன்றுமில்லை, இப்படம் ‘நடுநிசி நாய்கள்’ படத்தின் தெலுங்கு பதிப்பு. எர்ற குலாபியில் இவரது ஒன்றுவிட்ட தங்கை மகேஸ்வரியின் தம்பி முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். அவரது நடிப்பை பார்த்து வியக்கதான் ஆந்திரா வரைக்கும் வந்திருந்தார் ஸ்ரீதேவி.
வந்ததே தெரியாமல் தியேட்டருக்குள் போனவர் திரும்பி வெளியே வரும்போது பேரதிர்ச்சியை சந்தித்தார். ஏனென்றால் அந்த சாலையை டிராபிக் ஜாம் ஆகிற அளவுக்கு கூட்டம். இது படம் பார்க்க வந்த கூட்டமல்ல, தன்னை பார்க்க வந்த கூட்டம்தான் என்பது சில வினாடிகளியே புரிந்து போனது அவருக்கு. விரல் படாமல் தப்பித்தால் போதும் என்றாகிவிட்டதாம்.
நல்லவேளையாக தியேட்டர் ஊழியர்கள் அவரை காப்பாற்றி காரில் ஏற்றிவிட்டார்களாம்.

4 கருத்துகள்:

  1. விடுங்க பாஸ்..
    பழத்தை சுத்திதான் ஈ ங்க மொய்க்கும்..

    பதிலளிநீக்கு
  2. ///////(உதா. பன்னிகுட்டி, கோமாளி, அஞ்சா சிங்கம், ரொம்ப நல்லவன்.. பட்டாபட்டி.. டெரர்.. சேட்டைக்காரன்.. ஓட்டவடை)///////

    என்ன இது தெரிந்து கொள்ள கவி‌தை வீதி வாங்க...

    பதிலளிநீக்கு

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.