உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/02/23

ஒரு தலைக் காதலை தொடங்கினார் டி.ராஜேந்தர்


தமிழ் சினிமாவின் ஒன் மேன் ஆர்மி என்று கூறப்படும் விஜய.டி.ராஜேந்தர் தன்னுடைய ஒரு தலைக் காதல் பட வேலையை ஆரம்பித்து விட்டார்.
ஒரு தலை ராகம், ரயில் பயணங்களில், உயிருள்ள வரை உஷா, மைதிலி என்னை காதலி உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் விஜய.டி.ராஜேந்தர். தனக்கென்று சினிமாவில் ஒரு பாணியை வைத்துக் கொண்ட டி.ராஜேந்தர், நடிப்பு, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, இசை, தயாரிப்பு என்று படத்தின் பெரும்பாலான பணிகளை இவர் ஒருவரே செய்துவிடுவார்.
30ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் இருந்து வரும் விஜய.டி.ராஜேந்தர், இப்போதும், இந்த காலகட்டத்திற்கு ஏற்றவாறு தன்னால் சினிமா இயக்க முடியும் என்ற நம்பிக்கையில் படங்களை கொடுத்து வருகிறார். ஆனால் அதில் வெற்றி பெற முடியவில்லை. இருந்தாலும் அவ்வப்போது படங்களை இயக்கி கொண்டுதான் இருக்கிறார். கடைசியாக இவர் வீராசாமி என்ற படத்தை இயக்கி அதில் நடித்தும் இருந்தார். இதனைத்தொடர்ந்து அவர் நடித்து இயக்கும் படம் “ஒரு தலைக் காதல்”. குறள் டிவி மற்றும் சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் அவரது மனைவி உஷா டி.ராஜேந்தர் தயாரிக்கிறார்.
இந்தபடத்திலும் தன்னுடைய வழக்கமான பணிகளான நடிப்பு, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, பாடல்கள், இசை என அனைத்தையும் இவரே ஏற்றுள்ளார். பிப்.16ம் தேதி முதல் படப்பிடிப்பு வேலைகளை தொடங்கியுள்ளார். படத்தில் நாயகிகளாக முதுமுகங்கள் இரண்டு பேர் நடிக்கின்றனர்

3 கருத்துகள்:

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.