உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/02/27

நடிகை அசினால் தப்பினார் விஜய்

சிறீலங்கா அரசுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்ட நடிகர் விஜய் இன் காவலன் படத்தை தடை செய்ய சிறீலங்கா அரசு முற்பட்டபோதும், அசின் நடித்ததால் அது கைவிடப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரச தரப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜய் கடந்த வாரம் நாகபட்டினம் பகுதியில் நடத்திய கூட்டத்தில் சிறிலங்கா அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். தமிழக மீனவர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டால் சிறீலங்காவை உலக வரைபடத்தில் இருந்து அகற்றுவோம் என அவர் தெரிவித்தது சிறீலங்கா அரசை கடும் சினமடைய வைத்துள்ளது.

உடனடியாகவே விஜய் நடித்த காவலன் படத்தை சிறீலங்காவில் தடை செய்யுமாறு சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு, அரச அதிகாரிகளை பணித்திருந்தது. எனினும் இந்த நடவடிக்கை சென்னையில் உள்ள சிங்களவர்கள் மீதான தாக்குதல்களை தூண்டலாம் என்ற காரணத்தால் அது பின்னர் கைவிடப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஊடகவியலாளர்கள் மாநாட்டை நடத்திய சிறீலங்கா அரச தலைவர் ஊடகப்பிரிவின் பணிப்பாளர் பத்துல ஜெயசேகரா, விஜய் நடித்த படத்தை தடை செய்யும் நோக்கம் தமக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.

விஜய் ஏனைய அரசியல் தலைவர்களை போல செயற்படுகின்றார். அவரின் படத்தை தடை செய்வதற்கு முன்னர் நாம் அதில் நடித்த கேரளா நடிகை அசின் தொடர்பில் கவனம் செலுத்தினோம். அசின் சிறீலங்கா அரசுக்கு நெருக்கமானவர்.

2 கருத்துகள்:

  1. குளத்தோட கோவிச்சுக்கிட்டு கு............... கழுவாம விட முடியுமா?(ஏதாவது புரிகிறதா?)ஒரு திரைப்பட உருவாக்கத்தில் பல்லாயிரக்கணக்கானோரின் பங்கு இருக்கிறது!பணமே முதல் பிரதானம்!இப்படி எழுதுவதால் நான் விஜய் ரசிகனென்றோ,வக்காலத்து வாங்குகிறேனென்றோ எண்ணி விட வேண்டாம்!இதனால் கூடுதல் விளம்பரம் "அந்த" ஊசிப்போன படத்துக்குக் கிடைத்தது!அவ்வளவே!அசினோ,பிசினோ முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு ஆறுதல் தர மாட்டார்கள்!புரிந்து கொண்டால் சரி!

    பதிலளிநீக்கு

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.