உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/02/13

உலக கோப்பை கிரிக்கெட்டால் காதலர் தின படங்கள் ரிலீஸ் தள்ளி வைப்புஉலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தமிழ் திரையுலகில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. முப்பதுக்கும் மேற்பட்ட சிறு மற்றும் பெரிய படங்கள் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு விட்டது. நாளை காதலர் தினத்தையொட்டி ரிலீஸ் செய்வது என்ற திட்டம்தோடு அவசர அவசரமாக தயாரான எங்கேயும் காதல், வானம், கோ போன்ற படங்களும் நிறுத்தப்பட்டு விட்டன.
 


இதனால் அப்படங்களில் நடித்தவர்கள் வருத்தத்தில் உள்ளனர். எங்கேயும் காதல் படத்தை பிரபுதேவா இயக்கியுள்ளார். ஜெயம் ரவி, ஹன்சிகா மோட்வானி ஜோடியாக நடித்துள்ளனர். முழு நீள காதல் படமாக தாயராகியுள்ளது.காதலர் தினத்தில் இதை ரிலீஸ் செய்வதே பொருத்தமாக இருக்கும் என்று படக் குழுவினர் கருதினர். ஆனால் உலக கோப்பை கிரிக்கெட் ஜுரம் நாடெங்கும் பரவியுள்ளதால் தியேட்டர்களுக்கு, ரசிகர்கள் வரத்து குறைந்து விடும் என்ற அச்சம் ஏற்பட்டது.
 
கிரிக்கெட் பயிற்சி ஆட்டங்கள் இன்று முதல் துவங்குகின்றன. உலக கோப்பை போட்டி வருகிற 19-ந்தேதி ஆரம்பிக்கிறது. இதனால் இப்படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்து விட்டனர்.இதுபற்றி பிரபுதேவா கூறும் போது எங்கேயும் காதல், காதலர் தினத்தில் ரிலீஸ் ஆக வேண்டிய அழகான காதல் கதை. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அற்புதமான காதல் பாடல்களை பாரீஸ் விதிகளில் படமாக்கினோம்.
 


தயாரிப்பாளர் தரப்பில் உலக கோப்பை கிரிக்கெட் இருப்பதால் ரிலீசை தள்ளி வைப்பது நல்லது என்று கருதினர். எனவே ஏப்ரல் மாதத்துக்கு இப்படம் தள்ளிப் போகிறது என்றார். இதில் நாகியாக நடித்த ஹன்சிகா மோட்வானியும் வருத்தப்பட்டார்.அவர் கூறும் போது எங்கேயும் காதல் தமிழில் எனக்கு முதல் படம். காதலர் தினத்தில் வெளியிடுவதற்கு தகுதியான படம். அதில் இடம் பெற்ற நெஞ்சில் நெஞ்சில் என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது என்றார்.
 
கோ படம் ரிலீசாகாததால் அப்படத்தில் நாயகியாக நடித்த கார்த்திகாவும் வருத்தத்தில் உள்ளார். இவர் பழைய நடிகை ராதாவின் மகள்-இவருக்கும் இதுதான் தமிழில் முதல் படம் அவர் கூறும் போது காதலர் தினத்தையொட்டி கோ படம் ரிலீசாகும் என்று மும்பையில் உள்ள என் நண்பர்களிடம் சொல்லி வைத்து இருந்தேன். அழகான காதல் கதையாக இப்படம் வந்துள்ளது. படம் வராதது ஏமாற்றமாக உள்ளது என்றார். 

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.