உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/02/04

லண்டன் நண்பரைக் கரம் பிடித்த அனுஹாசன்!


 காபி வித் அனு புகழ் அனுஹாசன், தனது நீண்டகால 
லண்டன் பாய்பிரண்ட்டை திருமணம் செய்துள்ளார். 
இந்திரா படத்தின்மூலம் அறிமுகமானவர் நடிகை 
அனுஹாசன். இவர் நடிகர் 
கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசனின் 
மகள் ஆவார்.
அனுஹாசனுக்கும், விகாஷ் என்பவருக்கும் கடந்த பத்து 
ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. பின்னர் 
இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் 
விவாகரத்து பெற்றனர்.
பின்னர் சிலகாலம் தனிமையில் வாழ்ந்து வந்த 
அனுஹாசன், ‌பொது நிகழ்ச்சியில் கலந்து 
கொள்ளாமல் இருந்தார். அதன்பின்னர் குணச்சித்திர 
வேடங்களில் நடித்து வந்த அனுஹாசன், விஜய் டி.வி.யின் 
காபி வித் அனு மூலம் பிரபலமானார். இதனிடையே அனுவுக்கு 
இணையதளம் மூலம் லண்டனை சேர்ந்த கிரகாம்
 என்பவரது அறிமுகம் ஏற்பட்டது. முதலில் நட்பாக 
ஆரம்பித்தது, பின்னர் காதலாக வளர்ந்தது.இவர்களது காதலுக்கு இருவரது பெற்றோரும் சம்மதம்
தெரிவித்தனர். இதனையடுத்து கடந்தாண்டு ‌திருமண
 நிச்சயதார்த்தமும் நடந்தது. இந்நிலையில் சில
தினங்களுக்கு முன்னர் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் கமல்ஹாசன், கெளதமி, ஸ்ருதிஹாசன்,
அக்ஷராஹாசன், மணிரத்தினம், சுஹாசினி மற்றும் இருவீட்டராது
நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டு மணமக்களை
வாழ்த்தினர். திருமணத்திற்கு பின்னர் ‌சென்னையில்
இருப்பாரா? அல்லது லண்டனில் இருப்பாரா? என
இன்னமும் முடிவு செய்யவில்லையாம் அனுஹாசன்

1 கருத்து:

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.