உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/02/16

உலகக் கிண்ணத்தை வெல்லுவோம்


எங்களுடைய அணி பலம் வாய்ந்த அணி. அதனால் எங்களால் கோப்பையை வெல்ல முடியும் என நியூசிலாந்து வீரர்கள் தெரிவித்தனர். சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள பிரன்டன் மெக்கல்லம், ராஸ் டெய்லர், ஸ்காட் ஸ்டைரிஸ், மார்டின் குப்தில் ஆகியோர் கூறுகைளில் உலகக் கோப்பையில் மற்ற அணிகளுடன் போட்டி போட தயார் என கூறினார்.
ஆல்ரவுண்டர் ஸ்காட் ஸ்டை ரிஸ் கூறுகையில், ‘உலகக் கோப்பையை விட வேறு எதுவும் பெரிதல்ல. இதற்கு முன் இந்தியா வந்தபோது சிறப்பாகவே விளையாடியிருக்கிறேன். இதற்கு முன் எல்லா அணிகளையும் வென்றிருக்கிறோம். தாமதமாகத்தான் போராடத் தொடங்கி யிருக்கிறோம். ஆனாலும் உலகக் கோப் பையில் சவால் அளிக்கும் வகையில் விளை யாடுவோம்.
இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், எங்களின் இப்போதைய பயிற்சியாளருமான ஜான் ரைட்டின் அனுபவம் எங்களுக்கு முக்கியமானது. அவருக்கு இந்தியாவில் நிறைய நண்பர்கள் உள்ளனர்.
குறிப்பாக ஆடுகள பராமரிப்பாளர்களை அவருக்குத் தெரியும். இங்குள்ள ஆடுகளங்கள் எங்களுக்கு ஏற்ற வகையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜோன் ரைட் கூறினார் என்றார்.
ரோஸ் டெய்லர் கூறுகையில், சமீபத்தில் விளையாடிய பங்களாதேஷ் இந்தியத் தொடர்களில் இருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ளோம். கடந்த 6 மாதங்கள் எங்களுக்கு கடிமான காலமாக அமைந்து விட்டது. ஆனாலும் அதிலிருந்து நிறைய கற்றுக்கொண்டுள்ளோம். இந்த முறை கோப்பையை வெல்வதற்காக கடுமையாக உழைப்போம்.
காலிறுதிச் சுற்றில் நுழைந் துவிட்டால் அதன் பிறகு 3 ஆட்டங்களில் வெற்றிபெற்றால் கோப்பையைக் கைப்பற்றிவிடலாம். என்னைப் பொறுத்த வரையில் உலகக் கோப்பை என்பது மிகப் பெரிய ஒன்று. கடந்த உலகக் கோப்பையில் காயம் காரணமாக விளையாட முடியாமல் போய்விட்டது என்றார்.
பிரன்டன் மெக் கல்லம் கூறுகையில், எப்படியாவது காலிறுதிச் சுற்றுக்குள் நுழைந்துவிட வேண்டும் என்பதே எங்களின் முதல் இலக்கு என்றார்.

2 கருத்துகள்:

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.