உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/02/26

மீண்டும் ஒரு முறை சூர்யா-ஜோதிகா ஒன்றாக.....


நடித்துக் கொண்டிருக்கும் போதும் சரி, நடிப்பை நிறுத்திவிட்ட பிறகும் சரி ஜோதிகாவை யாராலும் மறக்கவே முடியாது.   திருமணம் ஆனதில் இருந்து, நடிப்பதை மொத்தமாக நிறுத்திவிட்டார் ஜோதிகா. அதற்குப் பிறகு அவர்களது 2 குழந்தைகளை வளர்ப்பதில் கவனம்

செலுத்தி வருகிறார் ஜோதிகா. இதற்கிடையில், ஓரிரு முறைகள் மட்டும் ஒன்றிரண்டு விளம்பரங்களில் நடித்துள்ளார். கடைசியாக இந்த ஜோடி ஒரு தொலைதொடர்பு நிறுவனத்தின் ஒரு தொலைகாட்சி விளம்பரத்திற்க்காக ஒன்றாக நடித்தார்கள்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்த ஜோடி மீண்டும் ஒரு முறை ஒன்றாக தோன்ற உள்ளனர். ஆனால் இந்த முறையும் ஒரு விளம்பரத்திற்கு தான்.
சூர்யா இதைப் பற்றி கூறுகையில்-"மிகுந்த வற்புறுத்தலுக்கு பிறகு தான் அவரை நடிக்க ஒப்புக்கொள்ள வைக்க முடிந்தது. ஒரு ரசிகனாக, நானும் ஜோதிகாவை திரையில் காண முடியாமல் தவிக்கிறேன். நான் அவரை மீண்டும் நடிப்பதை ஏற்றுக் கொள்ளுமாறு கூறி கொண்டுத்தான் இருக்கிறேன். ஆனால் அவர் அதை ஏற்று கொள்ள தயாராகயில்லை. காரணம், குழந்தைகளை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளதால், வேறு எதிலும் கவனம் செலுத்துவதில்லை என்ற முடிவில் உள்ளார். கோயமுத்தூரில் ஒரு நெருங்கிய உறவினர் (தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா) கலயாணத்தில் பங்கேற்க வேண்டி இருந்ததால், என்னுடைய காதலுக்கு (ஜோதிகாவுக்கு), காதலர் தினத்தன்று எந்த அன்பளிப்பும் கொடுக்க முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது" என்றார்

1 கருத்து:

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.