உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/02/06

செவ்வாய்க் கிரகம் செல்வதற்கான பயிற்சி பெற உங்களுக்கும் ஆசையா? (பட இணைப்பு)


 
மனிதனின் அடுத்த இலக்கு செவ்வாய்க் 
கிரகத்தில் கால் வைப்பது அல்லது 
குறைந்த பட்சம் அதைச் சுற்றி 
வலம் வருவது. விண்வெளி ஆராய்ச்சியில் 
ஈடுபட்டுள்ள எல்லா நாடுகளினதும் கனவு 
பெரும்பாலும் இதுவாகத்தான் உள்ளது.

ரஷ்யாவில் மார்ஸ்500 என்ற 
விண் ஓட மாதிரி வில்லையில் இதற்கான பயிற்சிகள் 
இடம் பெற்று வருகின்றன.

அங்குள்ள விண்வெளி ஆய்வு கூடமொன்றில் 
இதற்கான ஒத்திகைகள் நடக்கின்றன. தற்போது ஆய்வு 
கூடத்தில் உள்ள இந்த மாதிரி வில்லையில் கடந்த 
ஜூன் மாதம் முதல் ஆறு பேர் செவ்வாயில் 
அல்லது அதற்கு அருகில் காலத்தைக் 
கழிப்பதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். 
சிவப்புக் கிரகம் என்றும் அழைக்கப்படும் 
செவ்வாயை ஒத்த ஒரு பகுதியில் இவர்கள் 
விரைவில் விடப்படுவர். அது எங்கே என்பது 
இவர்களுக்கே தெரியாது.


ஆனால் செவ்வாய் கிரகத்தைப்போல் இருக்கும்.
 அவ்வளவு நேர்த்தியான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. 
இவர்களுக்கு வெளி உலகோடு தொடர்புகளும் கிடையாது. 
மிகவும் நெருக்கமானவர்களுடன் மட்டும் ஈமெயிலில் 
தொடர்பு கொள்ளலாம். இந்தக் கடும் பயிற்சி 520 தினங்களுக்கு 
நீடிக்கவுள்ளது. இவ்வளவுக்கும் உண்மையில் ரஷ்யா 
செவ்வாய்க்கிரகத்துக்கு மனிதனை அனுப்பத் 
திட்டமிட்டுள்ளது 2037ல்.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.