உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/02/12

மாணவர்கள் ஆங்கிலம் கலக்காத சுத்தத் தமிழில் பேச முயற்சிக்க வேண்டும்: சிவகுமார்

மாணவர்கள் ஆங்கிலம் கலக்காத சுத்தத் தமிழில் பேச முயற்சிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார் நடிகர் சிவகுமார்.கோவை சரவணம் பட்டியில் அமைந்துள்ள தனியார் கல்லூரி ஒன்றின் தமிழ் மன்றம் தொடக்க விழாவில் நடிகர் சிவகுமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசுகையில், உலகத்தில் 3 ஆயிரம் மொழிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் 6 மொழிகள்தான் செம்மொழிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று தமிழ் மொழி.ஆனால் பாருங்கள், தமிழ்நாட்டில் பிறந்து தமிழராக வாழ்கிறோம். தமிழ் பேசுகிறோம் என்பதை தவிர 100க்கு 90 பேருக்கு தமிழ் மொழி அதிகமாக தெரியாது. இதைவிட அவமானம் இருக்க முடியுமா.

எனவே மாணவர்கள் தமிழில் உரையாடும் பொழுது ஆங்கில கலப்பில்லாமல் தூய தமிழிலேயே பேச வேண்டும். ஆங்கில கலப்பினால் தமிழ் தனது தனித்தன்மையை இழந்து விடுகிறது.கல்லூரி பருவத்தில் மாணவர்கள் ஒழுக்கத்தையும் கல்வியையும் இரு கண்களாக கொள்ளவேண்டும். இந்த வயதில் எதையும் சுலபத்தில் கற்றுக் கொள்ளலாம். நீங்கள் நல்ல விஷயங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். என்றார்

5 கருத்துகள்:

 1. திரு சிவக்குமாரின் பேச்சுக்கள் மிகவும் சிறப்பாக இருக்கும்...

  உண்மைதான் இன்றைய சூழலில் தமிழை தழைக்க வைக்க அனைவரும் பாடுபட வேண்டும்...

  பதிலளிநீக்கு
 2. அனைத்து வாக்குகளும் தந்தாச்சி..

  நண்பரே அந்த சொல் சரிப்பார்ப்பை நீக்கி விடுங்கள் ...

  பதிலளிநீக்கு
 3. சிவக்குமாரின் கவலையும், உங்களின் கவலையும், எனது கவலையும் ஒன்றுதான். என்றாலும் மாணவர்கள் மட்டுமல்ல சாதாரண மக்களும் இன்று ஆங்கிலம் கலந்தே பேசுகிறார்கள்.

  பழக்கத்திற்குள்ளாகி பேசுவோர் ஒரு வகை. திட்டமிட்டே ஆங்கிலம் கலந்து பேசுவோர் மற்றோரு வகை.

  ஒரு சிலர் தூய தமிழில் பேச முயன்றாலும் ஏன் முடிவதில்லை? வெறும் பேச்சு மொழியாக மட்டும் ஒரு மொழி இருக்குமேயானால் அம்மொழி ஒருக்காலும் வளராது.

  தொழில் மொழியாக, உற்பத்தி மொழியாக தமிழ் வளர்க்கப்படாமல் தமிழை வளர்ப்பது எங்கே? காக்கவே முடியாது. இது மக்களால் முடியாது. ஒரு நல்ல அரசாலே் மட்டுமே முடியும். அத்தகைய அரசுகள் இதுவரை அமையவில்லை. இது எல்லா மொழிகளுக்கும் பொருந்தும்.

  ஊரான்.
  எனது வலைப்பூ: www.hooraan.blogspot.com

  பதிலளிநீக்கு
 4. நன்றி ஊரான்
  ஒரு விமர்சனமே செய்திருக்கிறீர்கள்

  பதிலளிநீக்கு

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.