உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/02/26

உணவுக்குள் ஊடுருவும் நச்சு இரசாயனத்திலிருந்து எம்மைப் பாதுகாக்க ஒரே வழி!

இன்று ஒவ்வொரு நாட்டிலும் அதிகரித்துவரும் சனத் தொகைக்குப் போதுமான அளவில் உணவுப் பொருட்கள் இல்லாத காரணத்தாலும், அவைகளின் விலையேற்றத்தின் காரணத்தாலும் விஞ்ஞான உலகம் புதிய கண்டுபிடிப்பு களான கலப்பினப் பயிர்களையும், விவசாய இரசாயனங்களையும் அறி முகப்படுத்தியுள்ளது.

உண்மையில் இவை விவசாய உற்பத்தியை அதிகரித்த போதிலும், இவ்விவசாய இராசாயனங்களின் அதிகரித்த பாவனையின் விளைவாக விஞ்ஞான உலகும், விவசாய உலகும் பல்வேறுபட்ட சவால்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றன.

இதில் முக்கியமாக விவசாய உற்பத்தி நடவடிக்கைகளின் போது விவசாய உற்பத்திகளை பீடைகளி லிருந்து பாதுகாப்பதற்காகவும், நீண்ட காலத்திற்குச் சேமிக்கும் போது ஏற்படும் சேதங்களிலிருந்து பாதுகாப்பதற்காகவும் பயன் படுத்தப்படும் நச்சுத்தன்மையான விவசாய இரசாயனங்களைக் குறிப் பிடலாம்.

இவற்றை முன்பின் யோசனை எதுவுமில்லாது உடனடியாக விற்பனை முகவரிடம் பெற்ற பயிர்களுக்கு விசிறுகின்றனர். இதனால் இதன் நஞ்சு, உற்பத்திப் பொருட்களினுள் ஊடுருவி அவ்வுணவை நச்சுத்தன்மை கொண் டதாக மாற்றுகிறது.

பின்பு அவற்றை நாமும், கால்நடைகளும் உண் ணும்போது உடல்களில் நச்சுச் சேர்க்கை ஏற்பட்டு இறுதியில் புதுப்புது நோய்களுக்கு ஆளாகி பணத்தையும், காலத்தையும் விரயமாக்கி மரணத்திற்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படுகிறது. இச்செயல் எம்மை மட்டுமல்லாமல் எமது எதிர்கால சந்ததியினரையும் பாதிக்கும். எனவே இரசாயன நாசினி சகல வழிகளிலும் தீங்கானது.

இப்பயங்கரமான கோரப்பிடியி லிருந்து நாமும் எமது எதிர்கால சந்ததியினரும், விளை நிலங்களும் உற்பத்திப் பொருட்களும், சுற்றுச் சூழலும், தினமும் பாவிக்கும் நீரும் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதற் காக தற்போது முழு உலக சமுதாய மும் இயற்கைமுறையான சேதன விவசாயத்தை ஏற்று அதன் ஒவ் வொரு தொழில் நுட்பச் செயல் முறைகளையும் விவசாய உற்பத்தி நடவடிக்கைகளில் பிரயோகிக்க முன்வந்துள்ளன.

இந்த நடவடிக்கையில் எமது நாடும் பின்னிற்கவில்லை. அதன் நிமிர்த்தம் ஒருவரப்பிரசாதமாகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சிந்தனையில் உதித்த “சேதன விவசாயம்” எனும் திட்டத்தின் கீழ் ஒரு அங்கமாக இயற்கை பீடைக் கட்டுப்பாட்டின் கருவில் தோன்றிய மூலிகைப் பீடை விரட்டிப் பாவனை சம்பந்தமாக மல்வத்தைப் பிரிவு விவசாயப் போதனாசிரியர் ஏ. எல்.

முஹம்மட் பரீட்டின் ஆலோசனை களுக்கமைய முழுக்க முழுக்க எமது சுற்றாடலில் காணப்படும் தாவ ரங்களிலிருந்து பெறப்படும் பொருட்களைக் கொண்டு தயாரிக் கப்பட்ட இயற்கை மூலிகைப் பீடை விரட்டியான மருந்து “னிஸிமிதிவிரிரிணி” எனும் பெயரில் விவசாயிகளின் பாவனைக்காக அண்மையில் வெளியிடப்பட்டது.

இவ்வியற்கைப் பீடை விரட்டிப் பாவனையால் கிடைக்கும் நன்மைகள்:

o எவ்விதமான பக்கவிளைவுகளும், பாதிப்பும், அபாயமும் கிடையாது.

o தீமை செய்யும் பீடைகள் விரட்டப்படுவதோடு, அவைகளின் வளர்ச்சிப் பருவமும் தாமதப்படுத்தப்படுவதனால் நன்மைசெய்யும் பூச்சிகள் அவற்றை அழித்துவிடும்.

o நன்மைசெய்யும் பூச்சிகள் அழிக்கப்படமாட்டாது. மேலும் விவசாயிகளுக்கும் நுகர் வோருக்கும் எவ்வித அபா யங்களும் ஏற்படாது.

o இதன் பாவனையின்போது பீடைகளில் எதிர்ப்புத்தன்மை உருவாகுமுன் அவை விரட் டப்படுகின்றன.

o இதனால் எமது சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது.

o இம்மருந்தை குறைந்த செலவிலும், ஒருவர் தனியாகவும், இலகுவாகவும், தமது வீட்டிலும் தயாரிக்கலாம்.

o பீடைகளை அழிப்பதை விட அதைக் கட்டுப்பாட்டில் வைத் திருப்பது செலவு குறைந்த ஒரு முறையாகும். இதற்கு இதன் பாவனை பொருத்தமான தாகவும் சிறப்பாகவும் துணை புரிகின்றது.

o பீடைக் கட்டுப்பாட்டிற்குச் செலவிடும் பணம் மீதப்படுத் தப்படுகிறது.

o நஞ்சற்ற உணவுப் பொருட்களை உற்பத்தி செய்ய முடிகிறது.

o பெரிய அளவில் தொழில்நுட்ப அறிவு அவசியமில்லை.

o தேவைக்கேற்ப எந்தளவிலும் தயாரித்துக்கொள்ள முடியும்.

o இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கு சந் தையில் நல்ல கேள்வி உள்ளது.

o எதுவித பயமுமில்லாமல் வீட்டில் களஞ்சியப்படுத்தி வைத்திருக்க முடியும்அஷ்ரப் ஏ. ஸமத்

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.