உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/02/10

முதல் மனிதன் தோன்றியது எங்கே? வரலாற்றை திருத்தும் புதிய முடிவு


உலகின் முதல் மனிதன் மேற்கு ஆசியாவில் தான்தோன்றினான் என, இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இது நாள் வரையில், கடந்த இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஹோமோ சேப்பியன் என்ற இனத்தில் இருந்துதான் நவீன மனிதன் தோன்றினான் என்றும், முதன் முதலில் ஆபிரிக்காவில் தோன்றிய இந்த ஹோமோ சேப்பியன் இனத்தவர் படிப்படியாக ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் இதர ஆசியப் பகுதிகள் நோக்கி இடம் பெயர்ந்தனர் எனவும், வரலாற்று அறிஞர்களால் நம்பப்பட்டு வந்தது.

சமீபத்தில் இஸ்ரேல் நாட்டில் உள்ள பெண் குரியான் விமான நிலையம் அருகில் இருக்கும் குகை ஒன்றில் (குசேம்), அந்நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நான்கு இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆதி மனிதனின் உடல் படிவங்களை கண்டெடுத்துள்ளனர்.
இதுகுறித்து டெல் அவிவ் பல்கலை விஞ்ஞானிகள் கூறியதாவது நான்கு இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஹோமோ சேப்பியன்களின் உடல் படிவங்கள் குசேம் குகையில் கிடைத்துள்ளன. மனித பல் போன்றுள்ள இந்த படிமம் மத்திய பிளைஸ் தோகின் காலத்தைச் சேர்ந்தது.
இதை ஆய்வு செய்ததில், உலகின் முதல் மனிதன் மேற்கு ஆசியாவில் தான் தோன்றினான் என தெரிய வந்துள்ளது. மேலும், மேற்கு ஆசியாவில் இருந்துதான் உலகின் பிற பகுதிகளுக்கும் பரவியுள்ளான்.
இவ்வாறு விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஆபிரிக்காவில்தான் முதல் ஹோமோ சேப்பியன் தோன்றினான் எனவும் உலகின் தாய்வீடு ஆபிரிக்கா எனவும் கூறப்பட்டு வந்த நிலையில், இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகளின் புதிய முடிவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதன் மூலம், நவீனகால மனிதனின் தோற்றம் குறித்த வரலாறு திருத்தி எழுதப்படும் என தெரிகிறது

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.