உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/02/25

அனன்யா மீது இயக்குநர் புகார்!
நாடோடிகள் நாயகி அனன்யா, சீடன் படப்பிடிப்பில் சரியாக ஒத்துழைப்பு தரவில்லை என அப்படத்தின் இயக்குநர் சுப்பிரமணிய சிவா புகார் கூறினார்.
நாடோடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் அனன்யா. இவர் தனுஷ் ஜோடியாக நடித்த சீடன் படம் இன்று ரிலீசானது. இதன் படப்பிடிப்பில் அனன்யா ஒத்துழைப்பு அளிக்காமல் தொல்லை கொடுத்ததாக படத்தின் இயக்குனர் சுப்ரமணியம் சிவா குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "சீடன் படம் சிறப்பாக வந்துள்ளது. தணிக்கை குழுவினரே படத்தைப் பாராட்டினர். படத்தின் நாயகி அனன்யா நன்றாகத்தான் நடித்தார். ஆனால் மேக்கப் போடும் விஷயத்தில் சரியாக ஒத்துழைக்கவில்லை. இதனால் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
கதைப்படி அனன்யாவுக்கு வீட்டில் வேலை பார்க்கும் பெண் வேடம். எனவே முகம் பளிச்சென்று இருக்கக் கூடாது என்று அறிவுறுத்தினேன். அவர் கேட்கவில்லை. நிறைய மேக்கப் போட்டுக்கொண்டு படப்பிடிப்பு க்கு வந்தார்.
முகத்தை எப்போதும் கொஞ்சம் சோகமாக இருக்கும்படி வைத்துக் கொள்ளச் சொன்னேன். அதையும் கேட்கவில்லை. படப்பிடிப்பு முழுவதுமே எங்களுக்குள் சண்டை சச்சரவாகவே இருந்தது.


ஒருவழியாக படப்பிடிப்பு முடிந்த பிறகு படத்தை அனன்யா பார்த்தார். அவர் நடிப்பு பிரமாதமாக வந்திருந்தது. படப்பிடிப்பில் தகராறு செய்ததற்காக இப்போது என்னிடம் மன்னிப்பு கேட்கிறார். நானும் மறந்து மன்னித்தேன்", என்றார்.


1 கருத்து:

  1. இயக்குனர் சொல்படி யார் நடிக்கிறார்கள்..
    அப்படி நடிக்க வைக்க இப்படி மிரட்டிதான் வேலை வாங்கனும்..

    பதிலளிநீக்கு

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.