உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/02/08

ஆர்யாவும்-சூர்யாவும் நன்றி மறந்த நெஞ்சங்கள்!
நன்றி என்பது மூன்றெழுத்து, மறதி என்பதும் மூன்றெழுத்து, அட..சூர்யா என்பதும் மூன்றெழுத்துதான்யா
என்று புலம்பிக் கொண்டிருக்கிறாராம் தயாரிப்பாளர் கம் ஒளிப்பதிவாளரான கேசவன்.
நந்தா படத்தின் தயாரிப்பாளரான இவர் சமீபத்தில் நடிகர் சூர்யாவை நேரில்சந்தித்து....? பணம் கிணம் கேட்டிருப்பாரோ? இல்லைவே இல்லை. பல வருடங்களுக்கு பிறகு இவர் இணைத் தயாரிப்பாளராக பொறுப்பேற்றிருக்கும் நர்த்தகி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வரச்சொல்லி அழைத்தார். அவ்வளவுதான்!
ஆரம்பத்தில் கறிவேப்பிலை மணக்கிற ரேஞ்சில் இருந்த சூர்யாவை, ஒரு கம்பீர நடிகராக்கியதே நந்தா என்ற திரைப்படம்தான். அந்த நம்பிக்கையில்தான் நர்த்தகி ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு அழைத்தாராம் கேசவன். அவரிடம் "கண்டிப்பா இந்த நிகழ்ச்சியில் நான் இருப்பேன்" என்று வாக்குறுதியெல்லாம் கொடுத்திருந்த சூர்யா, நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்று விட்டார். (இப்பல்லாம் செல் போன்ல நாட் ரீச்சபுள் அட் த மூவ்மெண்ட் என்பதையே ரிங்டோனாக வச்சுருக்காங்க சில பேர். அதுல சூர்யாவும் ஒருவரா இருக்கலாம்)
போன் அடித்து அடித்து ஓய்ந்த கேசவன் சூர்யாவின் உதவியாளரை தொடர்பு கொள்ள, அவரோ "நான் சாரை பார்த்தே பல மாசம் ஆச்சே" என்றாராம். இதே கதிதான் இப்படத்தின் மெயின் தயாரிப்பாளரான புன்னகைப்பூ கீதாவுக்கும். இவர் தயாரித்த 'அறிந்தும் அறியாமலும்' படத்தின் மூலம்தான் ஆர்யாவுக்கும் ஒரு அந்தஸ்து கிடைத்தது. கீதாவின் அழைப்புக்கு ஆர்யாவும் செவி சாய்க்கவில்லை. நிகழ்ச்சிக்கு வராமல் அவரும் எஸ்கேப்!
அட... ஆர்யாவுக்கும் மூணெழுத்து!

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.