உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/03/30

இந்தியா முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது.

மொஹாலியில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை அரையிறுதி கிரிக்கெட் போட்டியில் இந்தியா முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தானின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

துவக்கத்தில் சேவாக் அதிரடியில் 5 ஓவர்களில் 50 ரன்கள் எடுத்த இந்தியா 40-வது ஓவரில் 200 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

44-வது ஓவரில் பேட்டிங் பவர்பிளே எடுக்கப்பட்டது. அதில் ரெய்னா சிறப்பாக விளையாட இந்தியா 43 ரன்களை எடுத்தது. ரெய்னா கடைசியில் 39 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்ததால் இந்தியா ஓரளவுக்கு சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது.

சச்சின் டெண்டுல்கர் இன்று சரியாக விளையாடவில்லை. இடையிடையே அபாரமான பவுண்டரிகளை அடித்தாலும் மொத்தம் 6 முறை அவர் தப்பினார். அதில் 4 முறை சுலபமான கேட்சை பாகிஸ்தானியர் கோட்டை விட்டனர்.

ஆட்டத்தின் 26-வது ஓவரில் ரியாஸ் திருப்பு முனை ஏற்படுத்தினார். பார்மில் உள்ள கோலியை அவுட் செய்த அவர் அடுத்ததாக சற்றும் எதிர்பாராத அபாய பந்தை வீசி யுவ்ராஜை 0-இல் பவுல்டு செய்ய இந்தியா 141/4 என்று ஆனது.

டெண்டுல்கரும் தோனியும் இணைந்து ஸ்கோரை 12 ஓவர்களில் 187 ரன்களுக்கு உயர்த்தியபோது 115 பந்துகளில் 11 பவுண்டரிகள் அடித்த சச்சின் டெண்டுல்கர் சயீத் அஜ்மல் பந்தில் அஃப்ரீடீயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 100-வது சதத்தை எடுக்க விடமாட்டோம் என்று ஷாகித் அஃப்ரீடி கூறியதை நடத்திக் காட்டினார்.

தோனி 42 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் என்று திணறினார். அவரால் சுதந்திரமாக விளையாட முடியவில்லை. கடைசியாக ரியாஸ் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

அதன் பிறகு ஹர்பஜன் சிங் 12 ரன்கள் எடுத்தார். சயீத் அஜ்மல் பந்தை இந்தியாவின் நட்சத்திர வீரர் சச்சின் உட்பட எந்த ஒரு வீரரும் புரிந்து கொள்ள முடியவில்லை.

அவர் வீசிய பந்துகள் டாவின்சி கோட் என்றும் அதனை இந்தியர்களால் புரிந்து கொள்ளமுடியவில்லை என்றும் நவ்ஜோத் சிங் சித்து கூறுகிறார். இது உண்மைதான். அவர் 10 ஓவர்கள் வீசி 44 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

உமர் குல் முதலில் சேவாக் கையில் விளாசல் வாங்கி பிறகு எழும்ப முடியவில்லை. அவர் 8 ஓவர்களில் 69 ரன்கள் கொடுத்தார். அஃப்ரீடி 10 ஓவர்களில் 45 ரன்கள் கொடுத்து விக்கெட்டுகள் இல்லை.

30-வது ஓவர் முதல் 45-வது ஓவர் வரை இந்தியாவால் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை. 45-வது ஓவரில் ஹர்பஜன் சிங் ஸ்வீப் செய்து பவுண்டரி அடித்தார்.

மொகமட் ஹஃபீஸ் 10 ஓவர்கள் வீசி 34 ரன்களை மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். அதுவும் கம்பீர் விக்கெட். அன்று தென் ஆப்பிரிக்கா செய்ததை இன்று பாகிஸ்தான் பந்து வீச்சில் செய்துள்ளது. பேட்டிங்கிலும் தென் ஆப்பிரிக்கா இந்தியாவுக்குச் செய்ததை இன்று பாகிஸ்தான் செய்யுமா என்பதைப் பார்ப்போம்

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.