உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/03/08

இமயத்திலிருந்து கிளம்பும் ரஜினி!

எழுதுவதற்கு பரபரப்பாக எதுவும் இல்லையென்றால், ரஜினியை பயன்படுத்திக் கொள்வது ஊடகங்களின் நெடுநாள் வேலையாகவும், பொழுதுபோக்காகவும் இருக்கிறது. அந்த வகையில் `கேப் ஃபில்லர்` என்றே அழைக்கலாம் ரஜினியை! `ரஜினி அரசியலுக்கு வருவது எப்போது?` என்றோ, `சூப்பர் ஸ்டார் இமயமலைக்கு பயணம்` என்றோ அவ்வப்போது கற்பனையை பறக்கவிட்டு எழுதப்படும் செய்தி கட்டுரையை லட்சத்தி ஓராவது தடவையாக வெளியிடுவதில் தயக்கமே காட்டுவதில்லை இந்த ஊடகங்கள்.

இந்த செய்தியும் அப்படிப்பட்ட ஒன்றுதான் என வாசகர்கள் நினைப்பது இயல்பு. ஆனால் நிஜம் அதுவல்ல. சீரியஸ் ஆகவே இமயமலைக்கு கிளம்புகிறார் ரஜினி. ராணா படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் இன்னும் முழுமையடையவில்லையாம். ஏப்ரல் முதல் வாரத்தில்தான் படப்பிடிப்புக்கு கிளம்புகிறார்கள். அதுவரைக்கும் இங்கே இருப்பது அவ்வளவு நல்லதல்ல என்று நினைக்கிறாராம் ரஜினி. (எலக்ஷன்தான், வேறென்ன?) அதுமட்டுமல்ல, இமயமலை அடிவாரத்தில் ரஜினிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டு வரும் ஆசிரம வேலைகளும் ஜரூராக நடந்து வருகிறது. அதையும் அப்படியே மேற்பார்வையிட விரும்புகிறாராம் ரஜினி.

ராணாவின் முதல் கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற இருக்கிறது. எனவே இமயமலையில் இருந்து அப்படியே படப்பிடிப்புக்கு கிளம்பும் எண்ணமும் இருக்கிறதாம் அவருக்கு

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.