உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/03/17

இணையம் என்பது ஒரு உளவு இயந்திரம்: அசாஞ்ச் புகழாரம்

உலகம் இதுவரை கண்டிராத அளவிற்கு இணையம் ஒரு உளவு இயந்திரமாக செயல்படுகிறது என விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் புகழாரம் சூட்டியுள்ளார்.

அமெரிக்காவுடனான சர்வதேச நாடுகளின் தூதரக ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச். சுவீடன் பெண்கள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக இவர் மீது லண்டன் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக மாணவர்களிடையே அசாஞ்ச் பேசியதாவது: இணையம் குறிப்பாக பேஸ்புக் போன்ற சமூக இணையதளங்கள் ரகசியங்களை திரட்ட அரசுகளுக்கு நல்ல வாய்ப்பு அளிக்கின்றன. மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்பே கெய்ரோவில் பேஸ்புக் புரட்சி வெடித்து இருக்க வேண்டும்.
முக்கிய பங்கேற்பாளர்களை திரட்ட பேஸ்புக் உதவியாக இருந்தது. இதன் பின்னர் இவர்கள் அடிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அரசாங்கம் என்ன செய்கிறது என்பதை தெரிவிக்கும் திறன் இணையத்திற்கு உள்ளது.
உலகம் இதுவரை கண்டிராத அளவிற்கு இணையம் ஒரு உளவு இயந்திரமாக செயல்பட்டு வருகிறது. கொடுங்கோல் ஆட்சிகளை அழிக்க தொழில்நுட்ப வளர்ச்சி உதவுகிறது. பேச்சு சுதந்திரத்துக்கோ அல்லது மனித உரிமைக்கோ தொழில்நுட்பம் ஆதரவானது இல்லை.
அரசாங்கங்களை உளவு பார்க்க உதவக் கூடியது. அரபு நாடுகளில் எழுந்துள்ள புரட்சிக்கு என்னுடைய இணையதளம் உதவியாக இருந்தது. அமெரிக்க தூதரக அதிகாரிகளின் ஆவணங்கள் வெளியானது மூலம் டுனீசியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இவ்வாறு அசாஞ்ச் பேசினார்.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.