உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/03/28

ஆசிய நாடுகள் மூன்று இறுதிக்களங்களில் எனும் போது சந்தோஷம்

எம்மிடம் உள்ள பலவீனங்களை பயிற்சியின் மூலம் தகர்த்தெரிந்து உலகக்கிண்ண வரலாற்றில் சாதனை படைக்க தயாராகியுள்ளோம் என இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். 

மேலும், இம்முறை மூன்று ஆசிய நாடுகளும் அரையிறுதிக்கு தெரிவாகியுள்ளது, 1992 ஆம் ஆண்டும் இந்தியா மற்றும் இலங்கை அரையிறுதிப்போட்டியில் போட்டியிட்டது. அதே சூழ்நிலை இன்றும் உருவாகியுள்ளது. 

இந்நிலையில் நியூசிலாந்தினை இலங்கை அணி தோற்கடிக்கும் பட்சத்தில் இரு ஆசிய நாடுகள் உலக்கிண்ணத்துக்காக இறுதிப் போட்டியில் களமிறங்கும். அப்போட்டியானது முடிவினை கூறமுடியாத அளவுக்கு சுறுசுறுப்பாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

அணி வீரர்கள் அனைவரும் தமது திறமையினை திறம்பட வெளிக்காட்டுவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

உளரீதியான பலம் என்பது இரண்டாம் பட்சம் சிறந்த விளையாட்டு என்பதே வெற்றிக்கு வழிவகுக்கும் எனவும் சங்கக்கார தெரிவித்துள்ளார். 

இதேவேளை, மைதானங்களில் சிறந்த மைதானங்கள் உள்ள ஆசிய நாடுகளில் இம்முறை போட்டி நடைபெறவுள்ளதால், அம்மைதானங்களில் முத்தையா முரளிதரனின் சுழல் பந்து வீச்சு சிறப்பாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

அத்தோடு இங்கிலாந்துடனான போட்டியில் சுழல் பந்து வீச்சாளர்கள் தங்களது திறமையினை திறம்பட வெளிப்படுத்தியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். 

மேலும், இங்கிலாந்துடனான ஆரம்பாத்துடுப்பாட்ட வீரர்களது சிறப்பான துடுப்பாட்டமும் பாராட்டத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார். 

அதேபோன்று எதிர்வரும் போட்டிகளிலும் அவர்களின் அதிரடியான ஆரம்பத் துடுப்பாட்டம் அணியின் வெற்றி வழி வகுக்கும் என அவர் தெரிவித்துள்ளார். 

அத்தோடு அணியினர் ஓரிரு பிடிகளை நழுவவிட்டிருந்தாலும், அணியின் களத்தடுப்பு மிகவும் சிறப்பாக அமைந்திருந்ததாகவும். சுறுசுறுப்பான போட்டியில் பிடிகள் இடைநடுவே தவறுவது என்பது சாதாரண விடயம் எனவும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.