உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/03/12

வானம் படத்தில் சிம்பு பாடிய பாடலுக்கு மகளிர் அமைப்புகள் கண்டனம்வானம் படத்தில் சிம்பு பாடிய, எவன்டி உன்னைப் பெத்தான் பாடல் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற வேதம் படத்தை, சிம்பு நடிக்க வானம் என்ற பெயரில் எடுத்துவருகின்றனர். சிம்புதான் இப்படத்தின் நாயகன். அனுஷ்கா நாயகியாக நடித்துள்ளார்.படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடக்கிறது. இதில் அவரே ஒரு பாடலை எழுதி பாடவும் செய்துள்ளார். 'எவனடி உன்ன பெத்தான், அவன் கைல கிடைச்சா செத்தான்...', என்று துவங்கும் இப்பாடல் மட்டும் ஒரு சிடியில் வெளியிடப்பட்டது. பெரிய ஹிட் பாடலாக இது மாறியுள்ளது.

இந்த நிலையில், இந்த பாடலுக்கு மகளிர் அமைப்புகளிடம் இப்போது பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.அனைத்திந்திய பெண்கள் பாதுகாப்பு சங்கத்தலைவி சாந்தி இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடிகர் சிம்பு எழுதிய பாடல் வரிகள், பெண்கள் மனதை காயப்படுத்துவது போல் உள்ளது.எவன்டி உன்ன பெத்தான் அவன் கைல கிடைச்சா செத்தான் என்பவை தரமற்ற வரிகள், பாடல் எழுத வரைமுறைகள் உள்ளது. இழிவான வரிகளை பாடலுக்கு பயன்படுத்துவது இளைய சமுதாயத்தினரின் மனப்போக்கில் மாசு ஏற்படுத்தும்.

ராகிங் செய்பவர்களுக்கு ஏதுவாக இந்தப் பாட்டு அமைந்துவிட்டது. சினிமா யொரு சக்தி வாய்ந்த ஊடகம். அதில் சொல்லப்படும் கருத்துக்கள் மக்களை எளிதில் சென்று அடைகின்றனர். எனவே சிம்பு போன்ற வர்கள் பொறுப்போடு நடந்து கொள்ளவேண்டும். அந்த பாடலில் உன் மானம் காக்கிற மேல் ஆட நான்தான் என்றும் எழுதி இருக்கிறார்.

இது ஆபாசமானது. பொதுவாகவே சிம்பு படங்களில் பெண்ணினத்துக்கு எதிரான வன்மங்கள் தூக்கலாக உள்ளன. பெண்களுக்கு மரியாதை செய்வது போன்ற காட்சிகள் வைப்பதில்லை. முன்பு அவரது ஒரு படத்துக்காக சென்னையில் ஒட்டப்பட்டிருந்த முத்தக் காட்சி போஸ்டர்களே இதற்கு சான்று. சிம்பு தனது சிந்தனையை மாற்றிக்கொள்ள வேண்டும், என்று கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.