உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/03/13

திரை விமர்சனம் » காதலர் குடியிருப்பு .


பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது பெங்களூரில் 
நடந்த கலவரத்தில் காணாமல் போன ஒரு 
காதலனை பற்றிய கதை.
பெங்களூரில் உள்ள ஒரு போலீஸ் குடியிருப்பில்,
தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு ஏட்டு குடும்பமும், 
பெங்களூரை சேர்ந்த ஒரு இன்ஸ்பெக்டர் 
குடும்பமும் அருகருகே வசிக்கிறார்கள். 
இரண்டு குடும்பத்தினரும் நட்புடன் பழகுகிறார்கள். 
எதிர்பாராதவிதமாக ஏட்டு திடீர் மரணம் 
அடைகிறார். அவருடைய மனைவிக்கு போலீஸ்
 துறையில் வேலை வாங்கி கொடுத்து உதவுகிறார்,
 இன்ஸ்பெக்டர். இன்ஸ்பெக்டருக்கு ஒரு மகளும்,
 ஏட்டுக்கு ஒரு மகனும் வாலிப வயதில் 
இருக்கிறார்கள். "நீ எந்த பெண்ணை 
வேண்டுமானாலும் காதலித்துக்கொள். நம் 
குடும்பத்துக்கு உதவிய இன்ஸ்பெக்டரின் மகளை
 மட்டும் காதலித்து விடாதே" என்று மகனுக்கு 
ஏட்டு மனைவி அறிவுரை சொல்லி வைக்கிறார்.
இந்த சூழ்நிலையில், பாபர் மசூதி இடிக்கப்பட்டதை 
தொடர்ந்து பெங்களூரில் கலவரம் பரவுகிறது.
 வேலைக்கு போன இன்ஸ்பெக்டரின் மகள்
 கலவரத்தில் சிக்கிக்கொள்கிறாள். அவளை, 
ஏட்டு மகன் காப்பாற்றுகிறான். அவன் மீது
 இன்ஸ்பெக்டரின் மகளுக்கு காதல் ஏற்படுகிறது. 
அவளுடைய காதலை ஏட்டு மகன் ஏற்றானா? 
இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.
காதல் கதைதான் என்றாலும் படம்
 முன்னிலைப்படுத்துவது காதலை அல்ல,
 நன்றி மறவாமைக்காக காதலன் தனது 
காதலை தியாகம் செய்வதும் அவ்வாறு 
அவனை மனம் மாற்றுவதற்காக தாய் செய்யும் 
முயற்சிகளும்தான் படத்தின் உயிர்நாடி.
ஹீரோ அனிஷ் தேற மாட்டார். காதல் 
வரும்போது, ஊடல் கொள்ளும்போது, 
அம்மாவிடம் பேசும்போது, காதலியிடம் 
பேசும்போது, என எல்லா சந்தர்ப்பங்களுக்கும் 
சாருக்கு கைவசம் ஒரே முக பாவனை தான். 
பாவம்! அவர் வெச்சுக்கிட்டா வஞ்சனை பண்றார்..?
 சட்டில இருந்தாத்தானே அகப்பைல வரும்?
இப்படியாக முதல் கோணல் முற்றும்
 கோணல்ங்கற மாதிரி ஹீரோ செலக்ஷன்ல
 தப்பு பண்ணுன
 இயக்குநர் ஹீரோயின் செலக்ஷன்ல அடடே
 சொல்ல வெச்சுட்டார்.. ஸ்ருதி... கவர்ச்சிக்கும் 
கிளர்ச்சிக்கும் பஞ்சம் வைக்காமல் நடிப்புல பாஸ்
 மார்க் வாங்கிடறார் ஈஸியா.
சரண்யாவின் நடிப்பு அருமை. ஒரு சராசரி தாயின்
 பரிதவிப்பை கண் முன் 
கொண்டு வந்து நிறுத்துகிறார்.
 ஆனால் பேசாம செத்துத்தொலையேன்மா என 
கோபத்தில் மகன் சொன்னதும் நிஜமாகவே 
தற்கொலை செய்வது நம்பும்படி இல்லை.
அதே போல் மதக்கலவரம் நடக்கும்போது தனது
 மாமா மகனுக்கு ஃபோன் பண்ணி ஹீரோயின் 
கூப்பிடும்போது அவர் சாரி.. நான் வரலை பைக்ல 
பெட்ரோல் இல்லை என்பதும்,
 ஃபோன் ரிசீவரை கையில் 
வைத்துக்கொண்டே
 தனது அம்மாவிடம் கலவரம்
 நடக்கறப்ப நான் போனா
 மாட்டிக்குவேன் என
 சொல்வதும் காதில் பூ சுற்றும்
 காட்சிகள்.
படத்துல இயக்குநர் ரொம்ப நம்பி 
இருந்த சீன்
 பாபர் மசூதி இடிப்பு நடந்த
 சமயத்துல நாட்டுல
 நடந்த கலவரத்தை படத்துல 
சாமர்த்தியமா புகுத்துன விதம். 
ஆனா பின்னணி இசை,
 படமாக்கம், எடிட்டிங் எல்லாமே
 ரொம்பசுமார்தான் அந்த சீன்ல.
ஹீரோ, ஹீரோயின் சந்திப்பின்போது
 ஹீரோயின்ஹீரோவிடம் உன்
 ஃபிரண்டைகழட்டி விடு, நாம ஜாலியா
 பேசிட்டுஇருக்கலாம் என்பதும் 
அதற்குநண்பன் நொந்து கொள்வதும்
 செம காமெடி
 சீன். ஹீரோவின் நண்பராக நடிப்பவரின் 
முக பாவனை அருமை. அதனால்தானோ 
என்னவோ ஹீரோ வசனம் பேசும் 
காட்சிகளில்கூட கேமரா ஹீரோவின்
 நண்பன் முகத்தையேகாட்டுது.
பொதுவாக ஒரு காதல் கதை 
வெற்றி பெற வேண்டுமானால் ஹீரோ -
 ஹீரோயினுக்குள் 
காதல் வரும் சம்பவம் கவிதையாக 
இருக்க வேண்டும். பிறகு முதன்
முதலாக காதலை பரஸ்பரம் எப்படி
 வெளிப்படுத்துகிறார்கள்
 என்பதிலும் ஒரு கலக்கலான காட்சி
 அமைப்பு வைக்கவேண்டும். இந்த
 இரண்டையும் சரியாக கவனிக்காத
 காதல் படங்கள் தோல்வி அடைவதை 
தவிர்க்கவே முடியாது. காரணம்
 படம் பார்ப்பவர்கள்
 மனதில் முதலில் அந்த காதல் 
ஆழப்பதிய வேண்டுமே...
'கங்கை நதி எங்கேயோ பிறந்து..'
 பாட்டு 1968ல
 நடக்கற கதைல வர்ற சிச்சுவேஷன்கறதை
புரிஞ்சுக்கிட்டு இசை அமைப்பாளர் 
ஜேம்ஸ் வசந்தன்
 போட்டிருக்கும் பழைய கால மெட்டு இதம்.
'உயிரே...என் உயிரில் ஏன் வந்தாய்'
 பாட்டுக்கான ஓபனிங்க் லீடில் ஹீரோயின்
 ஒரே ஒரு நெற்பயிரைக் கையில் வைத்துக்
கொண்டு சிரித்துக்கொண்டே நிற்கும்
 காட்சியைபடமாக்கிய விதத்தில்
 இயக்குநர் தனது 
அழகியல் ரசனையை பதிவு செய்கிறார்.
துவராகநாத்தின் ஒளிப்பதிவு 
சுமார் ரகம்தான்.
ஹீரோயின் மாமா மகனாக 
வருபவர் சல்மான்கான் மாதிரி 
ஜம் என இருப்பதும், 
ஹீரோவாக வருபவர் பேப்பர் 
பொறுக்குபவர்போல் சீவாத பரட்டைத்தலை,
 துவைக்காத ஜீன்ஸ் பேண்ட்டுடன்
 இருப்பதும் தமிழ் சினிமாவின்
தலை எழுத்து.
காதலர் குடியிருப்பு - தங்கலாம்!

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

புதினப்பகிர்வு

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.