உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/03/17

அதிர்ஷ்டம் யாரு வீட்டு கதவ தட்டப்போகுதோ....


யானை மாலை போட்ட மாதிரிதான் ரஜினி கால்ஷீட் கிடைப்பதும். இந்த 'குபேர' மாலைக்கு ஏங்கிக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்களின் வரிசை நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போகிறது. எல்லாருக்கும் ஏதோ ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலும் இருக்கிறார் ரஜினி. அவரது கால்ஷீட் லிஸ்ட்டில் இத்தனை நாட்கள் கம்பீரமாக காத்திருந்த தாணுவை இப்போது கசியும் தகவல் கவலைக்குள்ளாக்கும் என்பது மட்டும் நிச்சயம். பல வருடங்களாகவே ரஜினியிடம் கால்ஷீட் கேட்டுக் கொண்டிருக்கிறார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். ரஜினியை பணத்தால் பர்சேஸ் பண்ண முடியாது என்பது அவருக்கும் தெரியும். இல்லையென்றால் கரன்ஸி மழையை சூப்பர் ஸ்டாரின் மொட்டை மாடியில் இறைக்கிற அளவுக்கு சக்தி கொண்டவர்தான் ரவி. எப்படியோ பேசி கரைத்து வைத்திருக்கிறாராம் ரஜினியை. 'ராணா' படத்தை முடித்து விட்டு சார் நம்ம கம்பெனிக்குதான் படம் பண்றாரு என்று அவர் சந்தோஷமாக சொல்லி வருவதை, சற்று மிரட்சியோடு விவாதித்துக்கொள்கிறார்கள் கோடம்பாக்கத்தில். இதற்கிடையில் 'எந்திரன் 2ல்' நடிக்க ரஜினி சம்மதித்திருப்பதாக இன்னொரு தகவலையும் கூறி வருகிறது சன் பிக்சர்ஸ்.அதிர்ஷ்டம் யாரு வீட்டு கதவ தட்டப்போகுதோ.....

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.