உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/03/22

குளிரையும் பொருட்படுத்தாமல் உணவு உறக்கமின்றி காவல் இருந்த நாய் -வீடியோ காட்சி


சுனாமி பேரலையின் போது காயமடைந்த நாயொன்றின் அருகில் பிறிதொரு நாய் 6 நாட்களாக குளிரையும் பொருட்படுத்தாமல் உணவு உறக்கமின்றி காவல் இருந்த சம்பவம் வடகிழக்கு ஜப்பானிலுள்ள இபாரகி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
மேற்படி பிரதேசத்தை சுனாமி பேரலை தாக்கிய போது வீடொன்று இடிந்து விழுந்ததில் நாயொன்று இடிபாடுகளின் கீழ் சிக்கி படுகாயமடைந்தது.
இதன்போது அந்நாயுடன் நட்புறவுடன் பழகிய பிறிதொரு நாய் சுனாமியால் அடித்துவரப்பட்ட மண் சகதியால் நனைந்த நிலையில் உயிர் தப்பியிருந்தது.
மேற்படி நாய் இடிபாடுகளின் கீழ் சிக்கியிருந்த தனது நண்பனான நாயை கைவிட்டு செல்வதற்கு மனம் ஒப்பாமல் 6 நாட்களாக அதனருகே அதற்கு காவலாக இருந்துள்ளது.
இந்நிலையில் மேற்படி பிராந்தியத்துக்கு செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்கள் சென்ற போது உடல் முழுவதும் மண் சகதியால் நனைந்து நடுங்கிக்கொண்டிருந்த நாயொன்று, அவர்களை இடிந்து விழுந்த 4 மாடி கட்டிட வீட்டின் பின் பகுதிக்கு அழைத்துச் சென்றது.
அங்கு சென்ற ஊடகவியலாளர்கள், இடிபாடுகளின் கீழ் நாயொன்று சிக்கியிருப்பதை கண்டு வியப்படைந்தனர். ஆரம்பத்தில் இடிபாடுகளின் கீழ் சிக்கியிருந்த நாய் இறந்துவிட்டதாகவே அவர்கள் நினைத்தனர். ஆனால் அருகில் சென்று அவதானித்த போது நாய் உயிருடன் இருப்பதை அவர்கள் அறிந்தார்கள்.
உடனடியாக மீட்புப் பணியாளர்களுக்கு தகவல் பறந்தது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளின் கீழ் சிக்கியிருந்த நாயை மீட்டனர்.
மேலும் காயமடைந்த நாயை அருகிலிருந்த மிருக வைத்தியசாலையொன்றுக்கு எடுத்துச் செல்லப்படும் வரை ஒரு மணி நேரமாக குறிப்பிட்ட நாய் அங்கிருந்து நகர மறுத்து காயமடைந்த நாயின் அருகிலேயே இருந்துள்ளது.
மனதை உருக்கும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி “ய டியூப்’ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
 

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.