உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்!

உலகில் அந்நியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும், அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!
தோழர் . சேகுவேரா.

2011/03/14

'ஓ' குரூப் ரத்த பெண்களுக்கு குழந்தை பாக்கியம் குறைவு ஆய்வில் தகவல்

ஒரு பெண்ணுக்கு குழந்தை பேறு ஏற்படுவது அவரது ரத்த குரூப்பை பொறுத்தது. குழந்தை பேற்றை ஊக்குவிப்பதும், குழந்தை பாக்கியத்தை குறைப்பதும் ரத்த குரூப்பை சார்ந்தே உள்ளது.

குறிப்பாக “ஓ” குரூப் ரத்த பெண்களுக்கு குழந்தை பாக்கியம் குறைவு. ஏனெனில் இவர்களின் கருப்பையில் குறைந்த அளவே கரு முட்டை உற்பத்தியாகிறது. அவ்வாறு உருவாகும் கரு முட்டையும் கரு உண்டாகும் தன்மை குறைந்ததாக உள்ளது.

இந்த தகவல் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. யாழ் பல்கலைக்கழகம் மற்றும் நியூயார்க்கில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருந்து கல்லூரியும் இணைந்து 560 பெண்களிடம் ஆய்வு நடத்தினர்.

அந்த ஆய்வுக்கு சராசரியாக 35 வயது வரை உள்ள பெண்களை தேர்ந்தெடுத்தனர். அவர்களுக்கு கருத்தரிப்பு சிகிச்சை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன.

ரத்தத்தில் உள்ள முதிர்ந்த கரு முட்டை சுரப்பிகளின் ஹார்மோனின் அளவு பார்க்கப்பட்டது. ஏனெனில் கருத்தரிப் பதில் இவற்றின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

சோதனைக்கு எடுக்கப் பட்ட ரத்த வகைகளில் “ஓ” குரூப் ரத்த பெண்களுக்கு முதிர்ந்த கரு முட்டை சுரப்பிகளில் ஹார்மோன் உற்பத்தியாகும் அளவு 10 மடங்கு அதிகமாக இருந்தது. இது கரு முட்டையின் கருத்தரிப்பு சக்தியை குறைய செய்கிறது.இதன் மூலம் “ஓ” குரூப் ரத்த பெண்களுக்கு மற்ற ரத்த குரூப் பெண்களை விட குழந்தை பாக்கியம் குறைவு என தெரிய வந்துள்ளது.

அதே நேரத்தில் “ஏ” குரூப், “ஏபி” குரூப் ரத்த வகையைச் சார்ந்த பெண்களுக்கு குழந்தை பாக்கியம் அதிகம் என தெரிய வந்துள்ளது. ஏனெனில் கருத்தரிப்பை குறையச் செய்யும் ஹார்மோன்களை இந்த “குரூப்” ரத்தம் கட்டுப்படுத்துகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

******************;;; வணக்கம்!! இது தமிழாரனின் கருத்துரைப்பெட்டி***************

அண்மைய பதிவுகள்

வாக்களித்து என்னை ஊக்குவிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றிகள்!!

தமிழில் தேடலாம்

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில், தொழில்நுட்ப செய்திகள்,சினிமா தகவல்கள்,மருத்துவ செய்திகள், பொதுவானவை மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.